நம் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை, ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி தேசிய கீதத்தை தங்கள் சொந்த குரலில் பாடி அந்த வீடியோவை அரசு இணையதளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும் வகையில் மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் ஒரு புதிய நிகழ்ச்சியை அறிவித்திருந்தது. ‘பல்வேறு மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பாரதத்தினர், பாரத வம்சாவளியினர் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பதிவுகள் வந்துள்ளன. இந்த முயற்சி அனைவருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.