ஹிந்து மதத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிரானவரா? அம்பேத்கர் . . .

பாபா சாகேப் டாக்டர் B.R.  அம்பேத்கர்:

சாதி ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயம் அமைய, பாபா சாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் பெரிதும் விரும்பினார். அம்பேத்கர் கண்ட கனவை, தற்போதைய மத்திய அரசு, நினைவாக்கி கொண்டு வருகின்றது. அது போல, அம்பேத்கர் கூறிய பல்வேறு செயல்களையும், RSS செய்து வருகின்றது.

அம்பேத்கருக்கும் RSS க்குமான தொடர்பு:

1952 ஆம் வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, தனித் தொகுதியான பாம்பே வடகிழக்குப் பகுதியில், அம்பேத்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில், N.S. கஜ்ரோல்கர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அம்பேத்கர் தோல்வியுற்ற போதும், தெங்கடி அவர்கள் தேர்தலில் முறை கேடுகள் நடந்து இருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு, புகார் ஒன்றினை அனுப்பி வைத்தார். அந்த புகாரை, விசாரிக்க வந்த அதிகாரியிடம், தனது புகாருக்கான ஆதாரத்தை, எடுத்து உரைத்தார் தெங்கடி அவர்கள். அதை பார்த்த அதிகாரிகளும், தேர்தலில் முறைகேடுகள் நடந்து உள்ளன, என தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினர். இதன் பிறகு, அம்பேத்கர் தனது இறுதிக் காலம் வரை, தொடர்ந்து நான்கு ஆண்டுகள், தெங்கடியுடன் நெருங்கிய நட்புடன் பழகி வந்தார்.

பின்னர், 1954 ஆம் வருடம், பண்டார தொகுதியில், அம்பேத்கர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருடைய தேர்தல் முகவராக  (ஏஜென்டாக) தெங்கடி பணியாற்றினார்.

அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க, “தீண்டாமைக்கு நமது சாஸ்திரத்தில் இடமில்லை” என்பதை அறிவிக்க, டிசம்பர் 13, 1969 ஆம் ஆண்டு, எல்லா மடாதிபதிகளையும் அழைத்து, கர்நாடகாவில் உள்ள உடுப்பியில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதில் எதிர்பார்க்கப் பட்டது 5 ஆயிரம் பேர். ஆனால்,  கலந்து கொண்டது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள். அனைத்து இந்து மத பெரியவர்களின் முன்னிலையிலும்,  “இந்து தர்ம சாஸ்திரங்கள், எந்த ஒரு இடத்திலும், தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை”  என தீர்மானம் வெளியிட்டு பிரகடனப் படுத்தினார்கள்.

அம்பேத்கர் பெரிதும் விரும்பி சமஸ்கிருதத்தை கற்றார்:

தமது சொந்த முயற்சியால், பண்டிதர்களின் துணை கொண்டு, “சமஸ்கிருதம்” மொழியை விரும்பிக் கற்று புலமை பெற்றார், அம்பேத்கர். சமஸ்கிருத மொழி அலுவல் மொழியாக வர வேண்டும், என அம்பேத்கர் கூறினார். பாரதத்தின் அதிகாரப் பூர்வ மொழியாக, “சமஸ்கிருதத்தை” ஆக்க கொண்டு வரப்பட்ட மசோதாவின் மீதான விவாதத்தில், செப்டம்பர் 10-ஆம் தேதி, 1949 ஆம் ஆண்டு, சமஸ்கிருத மொழிக்கு ஆதரவாக வாதாடியதோடு, கையொப்பத்தையும் அம்பேத்கர் இட்டார். சமஸ்கிருதம், நமது நாட்டின் தேசிய மொழியாக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என கோரினார்.

 

The RSS's tribulations over caste

 

RSS முகாமிற்கு வருகை புரிந்த அம்பேத்கர்:

1939 ஆம் வருடம், மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள பூனேவில் நடந்த, RSS முகாமிற்கு அம்பேத்கர் வருகை புரிந்தார். அங்கு அனைத்து சாதியினரும் சேர்ந்து ஒன்றாக,  பயிற்சியில் ஈடுபட்டதை கண்டு வியந்தார். மேல்சாதி, கீழ்சாதி என்ற பாகுபாடு இல்லாமல்,  அனைவரும் சேர்ந்து, ஒன்றாக உணவு அருந்துவதை கண்டு மகிழ்ந்தார்.

இட ஒதுக்கீட்டு முறை:

சமூகத்தில் ஏற்றத் தாழ்வு நீடிக்கும் வரை, இட ஒதுக்கீடு முறையும் நீடிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும், என்ற பேச்சுக்கே இடமில்லை, என்பதே RSS அமைப்பின் கருத்து. சமூக பாகுபாடு, களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைவரும் சமம் என்கின்ற நிலை உருவாக வேண்டும் என்பதற்காகவும், அம்பேத்கர் பாடுபட்டார்.

ஏற்றத் தாழ்வு நீடிக்கும் வரை, இட ஒதுக்கீடு முறையும் நீடிக்க வேண்டும் என்ற RSS கருத்தும், அம்பேத்கர் கருத்தும் ஒன்று தான். இட ஒதுக்கீட்டை RSS ஆதரித்தது. அம்பேத்கரும் அதையே விரும்பினார்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றி அம்பேத்கர்:

1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தொடக்கத்தில், மசூர்-இல் ஒடுக்கப் பட்ட மக்களின் மாவட்ட மாநாட்டைத் தலைமை தாங்கிய அம்பேத்கர், கம்யூனிஸ்ட்கள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசுகையில், “நான் அதில் சேரும் சாத்தியக் கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி. கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்துக்காகச் சுரண்டுபவர்கள்” என்று விமர்சித்தார்.

1938 ஆம் ஆண்டு, ஜனவரி 10 அன்று, பம்பாய் எஸ்பிளனேட் மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில், “எல்லா கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து, எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ, அவற்றை விட நான் அதிகம் படித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்னைக்கும் செயல் பூர்வமான அணுகு முறையை மேற் கொண்டது இல்லை” என்றும் விமர்சித்தார்.

1951 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று,  பி.டி.ஐ-க்கு (P.T.I.) அம்பேத்கர் அளித்த பேட்டியில் “நான் கம்யூனிசத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை என்ற ஒளிவு மறைவற்ற காரணத்தினால், என் கட்சி எக்காரணத்தைக் கொண்டும் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைக்காது” என்று கூறினார்.

370 வது பிரிவு:

“பாரத நாடு உங்கள் எல்லைகளை பாதுகாக்க வேண்டும், சாலை போட வேண்டும், உணவு தானியங்களை அளிக்க வேண்டும், ஆனால், காஷ்மீரில், பாரத நாட்டிற்கு, குறைந்த அதிகாரங்களே இருக்க வேண்டும்” என கேட்பது, பாரத நாட்டிற்கு எதிரான துரோகச் செயல். இந்த நாட்டின், சட்ட அமைச்சர் என்ற முறையில், இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன், என ஷேக் அப்துல்லாவிடம் அம்பேத்கர் ஆணித் தரமாகக் கூறினார்.

அம்பேத்கரின் ஒப்புதல் இல்லாமலேயே, மற்றவர்களையும் கலந்து ஆலோசிக்காமல், காஷ்மீருக்கு 370வது தனிச் சிறப்பு அந்தஸ்து, கோபாலசாமி அய்யங்காரின் மூலமாக, அரசியல் நிர்ணய சட்ட சபையில், தனி சலுகையாக சமர்ப்பிக்கப் பட்டது.

தற்போதைய மத்திய அரசு, அம்பேத்கர் விரும்பியது போல, காஷ்மீருக்கு வழங்கப் பட்ட சிறப்பு சலுகையான 370 வது தனிச் சட்ட சலுகையை நீக்கியது.

பொது சிவில் சட்டம்:

அம்பேத்கர், “பொது சிவில் சட்டம்” கொண்டு வர வேண்டும், என விரும்பினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால், அரசியல் அமைப்பின் 44-வது விதியை கொண்டு வந்தார். நாடு முழுமைக்கும், ஒரே விதமான சிவில் சட்டம் ஏற்படுத்தும் முயற்சியை அரசு விரைந்து செயல் படுத்த வேண்டும் என்பதே அந்த விதி. தற்போதைய மத்திய அரசு, தங்களது தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், “பொது சிவில் சட்டம்” கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து உள்ளது. அது, எப்போது நிறைவேற்றப்படும் என்பதே, பலரின் எதிர் பார்ப்பாக இருக்கின்றது.

மற்ற மதத்தை ஏற்க மறுத்தார்:

1935ல் அம்பேத்கர் மதம் மாறுவேன் என்று முடிவு எடுத்ததும், உலகின் பெருஞ் செல்வரான, “ஹைதராபாத் நிஜாம்” பட்டியல் இனத்தவர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்பார்கள் எனில், “அதற்கென ஐந்து கோடி ரூபாய், ஒதுக்க முடிவு செய்து இருந்தார்”, ஆனாலும், அம்பேத்கர், இஸ்லாம் மதம் மாறவில்லை.

1935ம் ஆண்டு, நாசிக் அருகே, ஒரு கிராமத்தில், சிலர் இஸ்லாம் மதத்துக்கு மாற உள்ளார்கள் என்று தெரிய வந்ததும், அவசரப் பட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அம்பேத்கர் எடுத்து உரைத்தார்.

ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாகவே, புத்த மதத்தை பார்த்தார். எனவே தான், அவர் புத்த மதம் தழுவினார்.

பண மதிப்பு இழப்பு (Demonetization):

1923 ஆம் ஆண்டு அம்பேத்கர் எழுதிய “Problems of Indian Rupee” என்ற புத்தகத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளை, மாற்றி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்படி ரூபாய் நோட்டுகளை, மாற்றி அமைப்பதன் மூலமாகவே,  விலை ஏற்றத்தையும், பணம் பதுக்கலையும் தடுக்க முடியும் என அறிவுறுத்தி இருந்தார்.

அம்பேத்கர் நினைத்தது போலவே, தற்போதைய மத்திய அரசு, பணமதிப்பிழப்பு செய்து, அம்பேத்கரின் ஆசையை பூர்த்தி செய்தது.

பாரத நாடு மதச்சார்பற்ற நாடா..??

அம்பேத்கர் எழுதிய சட்ட முன் வடிவில், சோசியலிசம் (Socialism), செக்குலரிசம் (Secularism) என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. அம்பேத்கர், நமது நாட்டை மதச்சார்பற்ற நாடாக பார்க்கவில்லை என்பது, இதன் மூலம், தெளிவாக விளங்குகின்றது.

எமர்ஜென்சி காலத்தில்,  இந்திரா காந்தி அவர்கள், தன்னுடைய சுய லாபத்திற்காக, 1976 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி, நமது நாட்டின் அரசியல் சாசனத்தில், சோசியலிசம் (Socialism), செக்குலரிசம் (Secularism) என்ற இரு வார்த்தையை சேர்த்தார்.

அம்பேத்கர் உயிருடன் இருந்த போது என்னவெல்லாம் நினைத்தாரோ, அதை முழுமையாக செயல்படுத்தி வருவதுடன், மிகப் பெரும் தலைவரான அம்பேத்கரை, ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்க நினைக்கும் சில தலைவர்கள் மத்தியில், அம்பேத்கர் ஆசையை, முழுமையாக பூர்த்தி செய்யும் வேலையை, தற்போதைய மத்திய அரசு செயல் படுத்தி வருகின்றது.

அம்பேத்கரின் பெயரை, தினமும் காலையில், ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில்  (ஒருமைப்பாட்டு மந்திரம்) உச்சரித்து வருவதுடன்,  பாபா சாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் கண்ட கனவை, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம், ஒவ்வொன்றாக, நினைவாக்கியும் வருகின்றது…