சுப.வீரபாண்டியன் என்னும் பெரியாரின் கைத்தடி, கருணாநிதியின் ஊன்றுகோல், ஸ்டாலினின் தொண்டரடிப் பொடி, தமிழ் மக்களுக்கு பெரியாரிஸ்டுகளின் அடாவடிகளை நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வாய்ப்பளித்திருக்கிறது. ”நுணலும் தன் வாயால் கெடும்” என்பதை சுப.வீ. உணர்த்தியிருக்கிறார். துக்ளக் 50வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் தி.க.,ஈவேரா பற்றி பேசியதை எதிர்த்து தன்னுடைய ஒரு அறிக்கையில் அவர் எவ்வளவோ உளறிக் கொட்டியிருக்கிறார். நாம் நம்மைப்பற்றிய அவரின் மையப்புள்ளியை மட்டும் விவாதிப்போம்!
1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியான ஊர்வலத்தில் ராமர், சீதை, விநாயகர், வெங்கடாசலபதி உட்பட ஹிந்து தெய்வங்களின் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து தி.க. ஆண், பெண் தொண்டர்கள் – ஆபாசமான வார்த்தைகள், செய்கைகளோடு, ஈ.வெ.ரா தலைமையில் வருகிறார்கள். இதை கேள்விப்பட்ட அன்றைய ஜனசங்கத்தினர் 100 பேர் கே.என்.லட்சுமணன் (90 வயது) தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சிறிது நேரத்தில் கலைந்து சென்றுவிடுகின்றனர். கை கலப்பு ஏற்படாமல் தவிர்க்க போலீஸ் அனுமதி வழங்கவில்லை. அனுமதி பெறாமல் வந்தவர்களை அவர்களிடம் முழு செக்கிங் செய்து சுற்றிவளைத்து நிற்கிறது. எனவே அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. கற்கள் கூட இல்லை.
இதை ரஜினிகாந்த் பேச்சில் குறிப்பிட்டதற்கு பதிலடியாகத்தான் சுப. வீரபாண்டியன் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அறிக்கை; அதில் ”ஆர்ப்பாட்டம் செய்த ஜனசங்கத்தினர் ஈ.வெ.ராவின் மீது செருப்பை வீசினர். அது மேலேபடாமல் கீழே விழுந்தது. அதை எடுத்த தொண்டர் சாமிகளை அடித்தார். இது ” சோற்றுக்குள் முழு பூசணிக்காயை மறைப்பது” போல் இல்லையா? அப்படியானால் ஒரு செருப்பு தானே இருந்திருக்க வேண்டும்? அனைத்து சாமிக்கும் எப்படி எங்கிருந்து செருப்பு மாலை கிடைத்தது?
இவர்கள் சயனைடு விஷத்தை விட ஆபத்தானவர்கள். குடியுரிமை சட்டத்தின் மூலம் ”கான்சன்ட்ரேஷன் கேம்ப்” போல ஏற்பாடு செய்து முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற இவர்களின் பொய் இப்போதாவது முஸ்லிம்களால் உணரப்படும் என்று நாம் நம்பலாம்!
திராவிடர் கழகத்தின் மீது ”ஹிந்து மக்கள் மனதை புண்படுத்தியதாக” நாம் வழக்கு போட்டோம்! தி.க.வின் ”கடவுள் மீது செருப்படி” போட்டோவை பிரசுரித்த துக்ளக் ஆசிரியர் சோவும் ஒரு மனுதாரர். விசாரணையில் ஜட்ஜின் தீர்ப்பு நமக்கெல்லாம் மாபெரும் சாட்டையடி. ஒரு வகையில் அவர் சொன்னதும் சரிதான். எப்படி?
”ராமபக்தர்கள், ஆஸ்திகர்கள் மனது புண்பட்டது என்பதே வழக்கு. புண்பட்டிருந்தால் இதற்காக தமிழ்நாடே கொந்தளிக்க வேண்டுமே? ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் போராட்டம் நடந்திருக்க வேண்டுமே? எதுவும் நடக்கவில்லையே! யார் மனதும் புண்படவில்லை என்பதால் வழக்கை டிஸ்மிஸ் செய்கிறேன்” என்பதுதான் ஐயப்ப பக்தர் ஆஸ்திகர் ஜட்ஜின் கருணாநிதி எழுதிக் கொடுத்து படித்த தீர்ப்பு. அதுசரி, ஜட்ஜ் சொன்னது போல் தமிழ்நாட்டில் நம்முடைய 100 பேர் எதிர்ப்பு மற்றும் சோ எதிர்ப்பு தவிர வேறு எதிர்ப்பு எதுவும் வெளியில் தெரியவில்லையே? மக்கள் வெளியில் வரவில்லையே? ”வேடிக்கை பார்க்கும் ஹிந்துக்களே, வீதியில் வந்து போராடு” என்ற ஹிந்து முன்னணியின் கோஷம் இது தெரிந்துதான் போடுகிறார்களோ?
பொங்க வேண்டிய இடத்தில் நேரத்தில் நாம் பொங்க வேண்டுமல்லவா? நமக்கு ஆதரவு இல்லாத ஒரு பிரபலமான வாரப்பத்திரிகை ஆசிரியர் என் தொடர்ந்த பேச்சுக்களால் நமக்கு ஆதரவான ஒரு அட்டைப்படம் போட்டு உள்ளே தலையங்கமும் எழுதினார். அடுத்த இரண்டு நாளில் என்னை அழைத்தார். ‘ஐயா உங்கள் பேச்சில் மயங்கி நான் எழுதிய தலையங்கம், அட்டைப்படம் எனக்கு நல்ல பாடம். இனி என்னிடம் வந்து விடாதீர் என்றார். காரணம் அந்த அட்டை படத்திற்கு 2,000 கடிதங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நம்மவர்கள் ஆதரித்து 2 கடிதம் கூட போடவில்லை! ஆதரவும் எதிர்வினையும் ஆற்ற வேண்டிய நேரத்தில் முழுபலத்துடன் நாம் செய்ய வேண்டாமா?
சென்னையிலுள்ளது மறைமலை அடிகள் பாலம். அன்று ஒரு கிறிஸ்தவர் பெயர் வைக்கச் சொல்லி எம்.ஜி.ஆருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அதை மீறி மறைமலை அடிகள் பெயரில் பாலத்தை திறந்தார். ஒருவர் கூட ஆதரவு தெரிவித்து அறிக்கை ‘போஸ்டர்’ வாழ்த்து சொல்லவில்லை என அவர் பின்னாளில் வருத்தப்பட்டாராம்! இன்று பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டரில் நாம் மிகவும் பலமாக இருக்கிறோம். நம் ஆதரவு கருத்துக்களுக்கு பாராட்டு, பகிர்தல், எதிர்ப்பு கருத்துக்கு மறுப்பு கண்டனம் என பதிவு செய்வதில் நாம் ” அசட்டையாக ” இருக்கிறோம் என்பது ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு ”நாம் விடும் வழி” என்பதை நாம் இன்னும் உணரவில்லை!
கத்திக்கு கத்தி, ரத்தத்திற்கு ரத்தம் என வன்முறையை தூண்டி நம்மை அழிக்க நினைக்கும் நம் எதிரிகள் முன்பு நம்முடைய எதிர்வினை முனைமழுங்கிய ஆயுதமாக ஆகிவருகிறது! வருங்காலத்தில் வல்லவன் வகுத்ததே வாய்க்கால். தர்மம் என்பது தனியாக நின்று போராடாது. அதன் ஆயுதங்கள் நாம்தாம். தர்மத்தின் வெற்றி நம் வெற்றி! நாம் எதிர்வினை ஆற்றாமல் குப்புறப்படுத்து உறங்கினால் ஆயிரம் கால்கள் நம் முதுகின் மீது பயணிக்கும். நாம் மண்ணோடு ஜீவச
மாதி ஆவோம்.
ஆண்மையுடன் இருப்போம், ஹிந்து என்று ஆணவமாக இருப்போம்! எதிர்வினையை காட்ட வேண்டிய தருணத்தில் முழு பலத்தோடு காண்பிப்போம். 21ம் நூற்றாண்டுக்கான தர்மம் இப்படித்தான் இருக்க முடியும்!
Must unit All Hindus irrespective of caste. Castesm is the wak point of our religion. To remove caste go to villages and explain them the danger Hindus are facing. If unity is not there we, our children vl be slaves to other religions. So hurry up form inteligent groups and each group select each village and do the work. Then see the differenve.