நீலகிரியில், ‘ஸ்டிராங் ரூம்’ கேமராக்கள், 20 நிமிடங்கள் இயங்கவில்லை. கால நிலையை காரணம் சொல்லாமல், தேர்தல் கமிஷன், 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். நீலகிரி, கோவை, தென் சென்னை உள்ளிட்ட பல இடங்களில், வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், பா.ஜ., ஆதரவாளர்களே அதிகம்.
தி.மு.க.,வினர் தங்கள் தோல்வியை மறைக்க, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கியுள்ளனர். ‘இண்டியா’ கூட்டணியினர் தோல்வி பயத்தில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் மீது குறை கூறி வருகின்றனர். தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளன.
அயோத்தியில் உள்ள ஒவ்வொருவருடைய எண்ணமும், ராமர் கோவில் வேண்டும் என்பது தான். அதன்படி, ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. ராமரை வழிபட ராகுல் செல்லவில்லை. அவர், ராமரை வெறுக்கிறாரா, ஹிந்து மதத்தை வெறுக்கிறாரா, அல்லது கடவுள்களை வெறுக்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.