ஆலய விழாக்களுக்கு தடையா? சதியை முறியடித்த தென்காசி ஹிந்துக்கள்
தென்காசியில் ஹிந்து ஆலயங்களில் சுமார் 400 ஆண்டு காலமாக அனைத்து கோயில்களிலும் உள்ள தெய்வங்கள் கோபுர வடிவமுள்ள சப்புரத்தின் மூலம் திருவீதி உலா வருவது வழக்கம். ௧௯௮௭ம் ஆண்டு தென்காசி மலையான் தெரு, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளல் திருவீதி உலா பதினொரு மண்டகப்படிதாரர் மூலம் நடத்தவிருந்தது.
மேற்கண்ட திருவிழாவை சுப்பிரமணிய
சுவாமி திருவீதி உலாவை தடை செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளும் தென்காசி பகுதி டி.எஸ்.பி.யும் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக நெல்லை மாவட்ட இந்து முன்னணி பதினொரு நாள் திருவீதி உலாவை நடத்தியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பணியில் இறங்கினர்.
அரசியல்வாதியாலும் காவல்துறையாலும் ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட அவலநிலையை துண்டு பிரசுரம் மூலமாக ஹிந்துக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களது ஒத்துழைப்பை வேண்டினர். இந்து முன்னணியினரால் அடித்து விநியோகம் செய்யப்பட்ட பிரசுரத்தினால் ஹிந்து முன்னணி அமைப்பு எதிர்பார்த்தது போல ஹிந்துக்கள் ஒன்று திரண்டனர். ஒன்று திரண்ட ஹிந்துக்களின் ஒற்றுமையும் கட்டுப்பாட்டையும் நிரூபணம் செய்யும் வகையில் பதினொரு நாள் திருவீதி உலாவும் காவல்துறையின் பாதுகாப்பின்றி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் ஹிந்து முன்னணி தொண்டர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கோயில் தர்மகர்த்தா மற்றும் உள்ளூர் அரசியல்
வாதிகள் ஹிந்து பிரமுகர்கள் ஆகியோர் காவல் துறையினரோடு நாம் ஒத்துப்போய்
விடுவோம் என்று கூறி பின்வாங்கும் முயன்ற சந்தர்ப்பத்தில் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஹிந்து முன்னணியினர் உறுதியோடு செயல்பட்டு கோயில் தர்மகர்த்தாவிற்கு நம்பிக்கையை ஊட்டி ஏனைய மண்டகப்படி
தாரர்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி வழக்கம்போல திருவீதி உலாவை நடைபெறச் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு விசேஷமான அம்சம் என்னவென்றால் காவல்துறையினர் பாதுகாப்பு கோராமலேயே நான்காம் திருநாளிலிருந்து அவர்களே பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததுதான்.
தமிழகத்திலுள்ள எந்த ஒரு ஆலயத்திலும் ஆண்டவன் எழுந்தருளி திருவீதி உலா வருவது தடை செய்யப்பட்டாலும் அப்பகுதி ஹிந்துக்களுக்கு ஹிந்து இயக்கங்கள் திருவீதி உலாவை தடை செய்வது பற்றி தகவல் தெரிவித்து அவர்களது ஒற்றுமையை வேண்டினால் நமது ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் வந்து செயல்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு
க.இ. கந்தசாமி,
விஜயபாரதம் ௧௯௮௭
வடபழனி சிவன் கோயில் நிலங்களை பாதுகாத்த ஹிந்து முன்னணி
வடபழனி சிவன் கோயிலை காப்பாற்றும் முயற்சியில் ஹிந்து முன்னணிக்கு பெரும்
வெற்றி கிடைத்தது. வடபழனியில் உள்ள சிவன் கோயிலை பராமரிக்க வசதியில்லை என்ற பெயரில் வேலியே பயிரை மேய்கிறார் போல அக்கோயிலின் அறங்காவலர் கௌரிசங்கர் என்பவர் கோயில் இடத்தை விற்க ஆரம்பித்தார். கோயிலின் நிலத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடக்கிற விதத்தில் அங்கு சென்னை மாநகராட்சியின் அனுமதியோடு ஒரு வியாபார அரங்கம் கூட ஆரம்பித்தனர்.
கோயில் நிலம் கபளீகரம் ஆவதற்கு அறங்காவலர் உடந்தையாக இருந்தார். அந்த நிலத்தை முஸ்லிம்களும் கூட ஆக்கிரமித்து இருப்பதாக தெரியவந்தது.
அறப்போர்……
வடபழனி வெங்கீஸ்வரன் கோயில் குளத்தையும் கோயிலின் இதர சொத்துக்
களையும் மீட்க வேண்டி இந்து முன்னணி தர்மயுத்தம் துவங்கியது. இதன் ஒரு அங்கமாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.சிதம்பரம் 11.12.87 அன்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். காவல்துறையினர் அவரை கைது செய்தார்கள் சிறையிலும் உண்ணாவிரதம் தொடர்ந்தது.
கௌரிசங்கர் இதன் பின் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் குன்றிய சிதம்பரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அறங்காவலர் தற்காலிக வேலை நீக்கம் செய்தால் போதாது கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு இனி இப்படி நேராத படி குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரி சிதம்பரம் உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.
௧௯௮௭ டிசம்பர் 15 அன்று ஹிந்து முன்னணி கோரிக்கையின் படி கௌரி சங்கரை பதவியில் இருந்து நீக்க அரசு உத்தரவிட்டது. இது முதலமைச்சரின் உத்தரவின் பேரால் செய்யப்பட்டது என்றும் செய்தி வந்தது. இனி எந்த கட்டுமான வேலையும் அங்கு நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்ளும்படி மாநகராட்சி பணிக்கப்பட்டது. சிதம்பரத்தின் மீது போடப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அவரும் அவருடன் சென்ற வெங்கடேசனும் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளர்
வி. சண்முகநாதன் சிதம்பரத்தின் உண்ணா
விரதத்தை முடித்து வைத்தார்.
17.12.87. அன்று வடபழனியில் இந்த வெற்றி தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்
தில் சிறைசென்று மீண்ட சிதம்பரமும், வெங்கடேசனும் சொற்
பொழிவாற்றினர்.-
டிசம்பர் ௨௫ ௧௯௮௭, விஜயபாரத இதழிலிருந்து)
– தொடரும்.