‘தி இந்து’ தமிழ் நாளிதழ், சென்னை பதிப்பில் (14.11.2017) கேரள காதலின் இன்னொரு முகம்” என்ற தலைப்பில் அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கேரளத்தில் ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் ஏமாற்றி மதம் மாற்றி, திருமணம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு பயன்படுத்தும் செயல் வேகமாகப் பரவி வருகிறது. இதுதான் ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கப்படுகிறது.
கேரளா வைக்கம் பகுதியைச் சேர்ந்த அகிலா (24) என்ற பெண்ணை ஷபின் ஜகான் என்பவர் ஏமாற்றி மதம் மாற்றி ஹாதியா என்று பெயர் மாற்றி திருமணமும் செய்து கொண்டார். அடுத்து அந்தப் பெண்ணை சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்ஸுக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டிருந்தார். இது தெரிந்த பெண்ணின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் அதிரடியாக அந்தத் திருமணத்தை ரத்துசெய்து பெண்ணை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதோ, அடுத்து ஒரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் பணி நிமித்தமாக குஜராத்தில் குடியேறியது. அந்த குடும்பத்துப் பெண் தனது மேல் படிப்புக்காக பெங்களூரு சென்றார். அங்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் முகம்மது ரியாஸ் திட்டமிட்டு அந்தப் பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தினார். தனது பாலியல் அடிமையாகவே மாற்றினார். ஆபாசமாக படமெடுத்து தனக்கு உடன்படவில்லையென்றால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியே மதம் மாற்றி ஆயிஷா என்று பெயரையும் மாற்றி திருமணமும் செய்து கொண்டார். தன்னை சவூதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்ஸுக்கு செக்ஸ் அடிமையாக விற்பதற்கு திட்டம் தீட்டியிருந்தார். இதை உணர்ந்த அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து பெற்றோர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அந்தப் பெண்ணே கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
சிறுபான்மையினர் ஓட்டுக்காக கம்யூனிஸ்டுகளும் காங்கிரசாரும் இத்தகைய அயோக்கியத்தனங்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
கேரளத்தில் துவங்கிய இந்த ஆபத்து நாளை நம்ம வீட்டையே கூட பதம் பார்க்கலாம்.
ஹிந்துக்களே உஷார்!