பிரிட்டனில் உள்ள அனூபம் மிஷன் என்ற ஹிந்துக்களின் தொண்டு நிறுவனம் சார்பில், பக்கிங்ஹாம்ஷையரில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அருகே ஹிந்துக்களுக்கான மயானம் ஒன்றை அமைக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை பிரிட்டனின் அரசு வழங்கியுள்ளது. இதனையடுத்து தகன மண்டபம், சடங்குகள் அறை, குளியல் அறை, காத்திருப்பு அறை, மண்டபம் உள்ளிட்டவற்றுடன் ஹிந்துக்களுக்கான தனி மாயனம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. ‘ஹிந்து சம்பிரதாயங்களின்படி இறுதி சடங்குகள் செய்வது ஆன்மாவிற்கு விடுதலை அளிப்பதற்கான அடிப்படை விஷயம். இதனால் இறந்தவர் குடும்பத்தினருக்கும் மன அமைதி கிடைக்கிறது. மயானம் அமைக்கும் பணிகளில் அனைத்து ஹிந்து அமைப்பினரும் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்’ என அனூபம் தொண்டு நிறுவன தலைவர் பரம் புயா சாஹேப்ஜி கூறியுள்ளார்.