அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர். இந்த பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காலனித்துவ முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டது என்றார்.
ஸ்ரீவிஜயபுரம் என்ற பெயர் பாரத சுதந்திர போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கிறது. சோழ அரசின் கடற்படை தளமாக செயல்பட்டது இந்த தீவு. இங்கு தான் நேதாஜி முதன்முறையாக பாரத தேசியக் கொடியை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.