ஸ்ரீ குருநானக் ஜெயந்தி விழா

சீக்கிய குருவான ஸ்ரீ குருநானக்கின் 553வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் ஸ்ரீ குருநானக் ஜெயந்தி  கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். பிரதமருக்கு சால்வை, சிரோபா மற்றும் வாள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் உரையாற்றிய பிரதமர், “குரு கோவிந்த் சிங்கின் 350வது ஜெயந்தி, குரு தேஜ் பகதூரின் 400வது ஜெயந்தி மற்றும் குரு நானக்கின் 550வது ஜெயந்தி விழா போன்ற முக்கிய பிரகாஷ் பர் எனப்படும் ஒளிகளுக்கான விழாக்களைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய மங்களகரமான நிகழ்வுகளின் உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்கள் புதிய பாரதத்தின் ஆற்றலை மேம்படுத்துகிறது. தேசியத்தின் பாதையை காட்டுகிறது. இது உள் அமைதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கான விருப்பத்தையும் நித்தியமாக வைத்திருக்கிறது. குரு கிரந்த் சாஹிப் வடிவில் நமக்குக் கிடைத்திருக்கும் அமிர்தத்தின் மகிமை, அதன் முக்கியத்துவம் காலம் மற்றும் புவியியல் எல்லைக்கு அப்பாற்பட்டது. நெருக்கடி பெரிதாகும்போது, இந்தத் தீர்வுகளின் பொருத்தம் இன்னும் அதிகமாகிறது. உலகில் அமைதியின்மை காலங்களில் ஒரு ஜோதியைப் போல உலகிற்கு வழிகாட்டுகின்றன. நமது குருக்களின் இலட்சியங்களை நாம் எவ்வளவு அதிகமாக பின்பற்றுகிறோமோ, அந்த அளவுக்கு ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். மனித நேய விழுமியங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு குருவின் போதனைகள் வலுவோடும், தெளிவாகவும் உள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் சீக்கியர்களின் மகத்தான பாரம்பரியத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. குருக்களின் ஆசீர்வாதத்துடன், பாரதம் தனது சீக்கிய பாரம்பரியத்தின் மகிமையை மேம்படுத்தி முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.