பல காலமாக பலரது பக்தி, சேவை, விருப்பம், தியாகம் உழைப்பு, திறமை, பெரியோர்களின் ஆசி, சான்றோர்களின் ஆசி, ஆகியவைகளால் இந்த சூழ்நிலை சமீபித்திருக்கிறது. இந்தப் பணியில் ஸ்ரீ பெரியவரின் ஆர்வம், முயற்சி கவனிக்கத்தக்கது.
1986-ல் அயோத்யாவில் வழிபாட்டிற்காக ஸ்ரீராமர் ஆலயத்தைக் திறந்துவிட வேண்டும் என்று ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உடனே ஸ்ரீமகா பெரியவர்கள் உத்தரவுப்படி கோவில் பூஜைகளுக்கு உரிய வெள்ளிப் பாத்திரங்கள், குடை, சாமரம் ஆகியவற்றை ராமமூர்த்தி சாஸ்திரிகள், I.C.F. நிலகண்ட அய்யர் ஆகியோர் மூலம் விமானத்தில் அயோத்யாவுக்குக் கொண்டு வரச் செய்து ஸ்ரீ பெரியவர்கள் நேரில் ஸ்ரீராமபிரானுக்கு சமர்ப்பித்தார்கள்.
அதே போன்று 1983-ல் நதிப்பாதுகாப்பு, தேச ஒற்றுமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புனித கங்கை நீர் பிரம்மாண்டமான பாத்திரங்களில் நாட்டின் நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு ”ஏகதாயக்கும்” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு யாத்திரை ஆந்திராவில் காடுபத்திரி என்ற இடத்திற்கு வந்திருந்தது. அப்போது கர்நூலில் இருந்து கால்நடையாக அங்கு வந்திருந்த ஸ்ரீமகாபெரியவர்கள், ஸ்ரீபெரியவர்கள், நாம் ஆகியோர் அதில் கலந்து கொண்டோம்.
இதுபோன்ற தமிழகக் கோவில்கள் விஷயத்திலும் போதிய கவனம், உரிய கவனம் செலுத்தி, கோவில்களில் (அழகான கோயில்கள், ஆசாரமான கோயில்கள், அனுக்ரக கோயில்கள்) நிதி, நியமம், நிர்வாகம் ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தி முழுமையான முன்னேற்றம் காண்பதற்கு முயல வேண்டும்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்யர்கள் மூவரும் அயோத்யா ஸ்ரீ ராம ஜன்ம பூமி பிரச்சினை தீர்வுக்கு செய்த தவம், எடுத்த முயற்சிகள், வழங்கிய ஆலோசனைகள் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப் பட வேண்டியவை. இவர்கள் போன்று ஏராளமான தவச்சீலர்கள், புனிதர்கள் செய்த தவத்தின் ஒருங்கிணைந்த பலன் இப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்பம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் திருவடிகளில் வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.