வேலைவாய்ப்பு அதிகரிப்பு

மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்ட காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு அறிக்கையில், 2021 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது துறைகளால் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்பு 3.10 கோடியாக இருந்தது. இது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை விட 2 லட்சம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபிறகு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.