கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில்கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் புரந்தேஸ்வரி, “கேரளா கம்யூனிச அரசு, ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித்தை கொன்ற கொலையாளிகளை மாநில அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. முதல் தகவல் அறிக்கையில், சம்பந்தப்பட்டஅமைப்பின் பெயரே சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற கொலைகளை அரசும் காவல்துறையும் ஏதோ பார்வையாளர்களை போல பார்த்துக் கொண்டிருக்கின்றன” என தெரிவித்தார். பா.ஜ.க மாநிலத் தலைவர் சுரேந்திரன் பேசுகையில், ”அட்டப்பாடி பழங்குடியினர் நலத் திட்டத்துக்காக, மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அந்த தொகையை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை” என கூறினார்.