வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., வேட்பாளர் சுரேந்திரன் ராகுலை தோற்கடிக்க ஓட்டு கேட்டு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?.
வயநாடு தொகுதியில் சுரேந்திரன் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறார். 10 முறைக்கும் குறைவாகவே ராகுல் வயநாடு தொகுதி மக்களை சந்தித்துள்ளார். தற்போது அவர் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் வருகிறார். இதன் மூலம் காங்கிரசின் மனநிலை என்ன என்பது தெளிவாகிறது.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.