உலகிலேயே உயர்ந்த மலைப் பகுதிகளில் அமைக்கப் பெற்றுள்ள, எல்லாப் பருவநிலைகளுக்கும் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற சாலை உள்ள தேசம் என்ற பெருமிதம் பாரதத்திற்குக் கிடைத்துள்ளது.
ஆம், நம் நாட்டில் ஐம்மு காஷ்மீர் மாநிலத்தின் லத்தாக் பிரதேசத்தில் உன்மிங்லா உச்சி என்ற பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த சாலை.
நம் நாட்டின் ராணுவத்துக்கு துணைபுரியும் ‘எல்லைப்புற சாலைகள் அமைப்பு’ ‘பிராஜக்ட் ஹிமாங்க்’ என்ற செயல்திட்டத்தின் அங்கமாக நிறைவேற்றியுள்ள 86கி.மீ. நீளமுடைய இந்த சாலை ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹான்லே என்ற சரித்திரப் புகழ் பெற்ற (புத்த மத மடாலயமும் பாரத விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் அமைந்துள்ள) கிராமத்திற்கும் அருகிலுள்ளது. லத்தாக் தலைநகரான லேஹ் நகரிலிருந்து 230 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த சாலை நவம்பர் 2 அன்று முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பொலிவியா நாட்டின் பொடோசி பகுதியில் 18,953 அடி உயரத்தில் அமைந்துள்ள சாலைதான் முதலிடத்தில் இருந்தது. உள்மிங்கலா சாலை இப்பொழுது முந்திவிட்டது.
ஏதோ நகர்ப்புறத்திலோ, சமவெளிப் பகுதியிலோ அமைந்துள்ள சாலை என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சாலை அமைந்துள்ளதோ உயர்ந்த மலை. இந்த பிரதேசத்தின் எப்படி? அக்னி நட்சத்திர நாட்களிலும் மைனஸ் 10 முதல் 20 டிகிரி செல்சியஸ் கடும் குளிர். பனிக்காலத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை போகும்.
இத்தகைய பகுதிகளில் பணியாளர்கள் கனமான உடையணிந்து குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் நிதானமாகத்தான் முன்னேற வேண்டும். இயங்க வேண்டும்.
இயந்திரங்களும் கருவிகளும் அடிக்கடி பழுதாக நேரிடும். இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையில்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ராணுவ ரீதியில் எவ்வளவு முக்கியமான கொடை இந்த சாதனை என்று புரிகிறதல்லவா?
வெள்ளிப் பனிமலையில் வீதி சமைத்து நாட்டின் விரோதிகளை விரட்டுவோம், வெற்றி கொள்வோம். டூ