கான்பூரின் நசீம் பாக் என்னுமிடத்தைச் சேர்ந்த இஷான் உல்லா, ஈஸ்ட் வெஸ்ட் டேனர்ஸ் என்னும் தொழில் அலகு ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். அங்கு காலணிகள் உள்ளிட்ட அனைத்து விதமான தோல் பொருட்கள், ஆடைகள், ஜவுளிகளை அவர் உற்பத்தி செய்கிறார். தேசிய சிறுதொழில்கள் கழகம் என்.எஸ்.ஐ.சியின் ஆதரவுடன் தற்போது அவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.15 கோடி விற்று முதல் கண்டுள்ளது. என்.எஸ்.ஐ.சி தற்போது அவரது நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக பதிவு செய்துள்ளது. இ.டபிள்யு.டி என்ற வணிக முத்திரையுடன் இந்தப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும். இஷான் உல்லா ரூ.1 லட்சம் முதலீட்டில் 1999ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார். தனது தொழில் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே அவரது நோக்கமாக உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு ஏற்ப சிறந்த சேவை, கட்டுபடியான விலை, நல்ல தரம், உரிய நேரத்தில் விநியோகம் என்ற நிலையை தக்க வைப்பதும் அவரது நோக்கமாகும்.