வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன

குடியரசு தினத்தை முன்னிட்டு பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளும் முயன்று வருகின்றன. இதனை தடுக்க பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை, காவல்துறை இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரில் இருந்து இரண்டு 40 மி.மீ கையெறி குண்டுகள், 3.79 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள், ஒன்பது டெட்டனேட்டர்கள், இரண்டு செட் டைமர் சாதனங்கள், யு.பி.ஜி.எல் கிரெனேட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. குர்தாஸ்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மல்கீத் சிங் என்பவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன. அவனின் கூட்டாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள். தப்பியோடியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பரில் குர்தாஸ்பூரில், 1 கிலோ ஆர்.டி.எக்ஸ், 6 கையெறி குண்டுகள், ஒரு டிஃபன் பாக்ஸ் குண்டு, மூன்று டெட்டனேட்டர்கள், இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.