விவசாய வன்முறையாளார்கள்

ஹரியானாவில் குண்டலி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருபவர்கள் அங்கு செய்துவரும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், சோனிபட்டில் கோழிப்பண்ணை ஒன்றில் பணியாற்றும் மனோஜ் பஸ்வான் தனது இருசக்கர வாகனத்தில் கோழிகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதி வழியாக சென்றார். அப்போது நிஹாங் அமைப்பைச் சேர்ந்தவர் போல இருந்த ஒருவர், பஸ்வானை தடுத்து நிறுத்தி தனக்கு இலவசமாக கோழியை கொடுக்கும்படி மிரட்டினார். பஸ்வான் கொடுக்க மறுக்கவே, அவரின் காலை உடைத்துள்ளார் அந்த நபர். பஸ்வானின் அலறல் சத்தம் கேட்டு வந்த காவலர்கள் அவரை தாக்கிய நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் நவீன் என்பதும், நிஹாங் அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சமீபத்தில் இதே பகுதியில், காவல்துறையின் இரும்பு தடுப்பில் கை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட லக்பிர் சிங்கையும் கொன்றது நிஹாங் அமைப்பை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.