விளையாட்டுகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்புகளை அதிகரிப்பதன் மூலம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு புதிய வழிகளைத் திறந்து வைப்பதில் ஒடிசா அரசு என்றும் முன்னிலை வகிக்கிறது. அவ்வகையில், பாரதத்தின் முதல் 200மீட்டர் தடகள உள்விளையாட்டரங்கம் ஒடிசாவின் கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வசதி, தடகள விளையாட்டு வீரர்கள்ஆண்டு முழுவதும் பயிற்சி பெற உதவும் என்பதுடன் மாணவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பயிற்சி அமர்வுகள் நடத்தவும் உதவும்.