“அர்த்தமுள்ள” தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வரும் நாட்களில் தன்னுடைய தனிப்பட்ட குறிப்புகளை பகிர்ந்து கொள்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார். ஆனால், இதனை அவரது கிரிக்கெட் ரசிகர்களும் நெட்டிசன்களும் ரசிக்கவில்லை. ஏனெனில், அவர் கடந்த ஆண்டு பட்டாசுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார், இதனையடுத்து, ‘தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்ற பிரசங்கங்களுக்குப் பதிலாக கோஹ்லி வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், விராட்கோஹ்லிக்குத்தான் ஐ.சி.சி கோப்பைகளையும் ஐ.பி.எல்லையும் வெல்வதற்கான உதவிக்குறிப்புகள் தேவை. விராட் கோஹ்லி ஐ.சி.சி கோப்பையை ஒரு கேப்டனாகஇதுவரைவென்றதில்லை, இந்தியன் பிரீமியர் லீக்கை வென்றதில்லை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும்விரைவில் விலகுவார்’ என்று சமூக ஊடகங்களில் அவருக்குபதிலளித்தனர்.