விமானிகளை குறிவைக்கும் தாலிபான்கள்

அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றன. ஆகஸ்ட் இறுதிக்குள் மொத்த அமெரிக்க ராணுவமும் ஆப்கனில் இருந்து வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தற்போது தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கன் ராணுவத்தில் உள்ள விமானப்படையினரை குறிப்பாக விமானிகளை குறிவைத்துக் கொல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 65 விமானிகளில், இதுவரை 7 விமானிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் பயங்கரவாதிகளுக்கு விமானப்படை கிடையாது. எனவே அரசு வசம் உள்ள பெரிய பலமான விமானப்படையை நிர்மூலப்படுத்தினால் ஆப்கனை எளிதாகக் கைப்பற்றலாம் என்பது அவர்களின் எண்ணம்.