வினோபா பாவே

விநாயக் நரகரி பாவே,  ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் பூமிதான  இயக்கத்தை தொடக்கி வழிநடத்தியவர்  . இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர். இவர் மராட்டிய மாநிலம் மும்பை அருகிலுள்ள  கொலபா எனும்; நரசிம்புராவ்பாவே-ருக்மணிதேவி தம்பதியருக்கு பிறந்தார்.தாய்மொழி:கொங்கணி/மராத்தி இவரின் சகோதரர்கள் பல்கொபா பாவே ,சிவாஜிபாவே இருவரும் சமூகசேவகர்கள்.வினோபா பாவே சிறந்த இந்துஆன்மீக போதகர், மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக  பங்கு கொண்டார்.

விடுதலை பெற்ற இந்தியாவில் நிலமற்ற ஏழை மக்களை கைதூக்கி விடுவதற்காக நிலசுவாதங்களிடம் இருந்து நிலங்களை தானமாக பெற்று, நிலம் இல்லாதோருக்கு கொடுக்கும் பூமிதன இயக்கம் 1951 ம் ஆண்டு ஆச்சார்யா வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.வினோபா பாவே இதற்கென நாடு முழுவதும் பயணம் செய்து பூமிதானா  இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக பெறப்பட்டு நிலமற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது 13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்

 பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போரில் கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்த பகவத் கீதைக்கு வினோபா பாவே உரை எழுதினார். இந்தியப் பிரதமர் திருமதி இந்திர காந்தியின் அவசரகால பிரகடனம் , சர்வாதிகார போக்கை கண்டித்தார்.

தொடர்ந்து இயங்கினார் வினோபாவே. எட்டு மொழிகளைக் கற்று அந்தந்த ஊரின் மக்களின் மொழியில் உரையாடி பங்காற்றினார் அவர். மொத்தமாக அவர் வாழ்நாளில் ஒன்றரை லட்சம் கிராமங்களில் நாற்பது லட்சம் ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டு இருந்தது. இதில் இத்திட்டம் மிகச் சிறப்பாகப் பீகாரில் ராஜேந்திர பிரசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளை பாராட்டி அவரது மறைவுக்கு பின் 1983ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.