இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுன்ட்-டவுன் செவ்வாய்க்கிழமை காலை 7.28 மணிக்கு தொடங்கியது.
புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டது. வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியைத் தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதுடன், இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். பேரிடா் பாதிப்பு முன்னெச்சரிக்கைக்கு மட்டுமின்றி, ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கும் இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது.