விடுதியில் மதமாற்றம்

மத்திய பிரதேசம், ரைசன் நகரில் ஏசுவின் சகோதரிகள் என்ற அமைப்பு நடத்தும் பிஷப் கிளெமென்ஸ் நினைவு விடுதியில் பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வது, மத பயிற்சிகள் அளிப்பது  குறித்த தகவல் வந்தது. இதையடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ அந்த கிறிஸ்தவ விடுதிக்கு திடீர் விஜயம் செய்து ஆய்வு செய்தார். இதில், மதமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. இதனையடுத்து இது குறித்து விசாரணையை தொடங்கி சிறுமிகளை அவர்களின் பெற்றோரிடம் அனுப்ப மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். வெளிநாட்டு நிதி பெறப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணையைத் தொடங்க அறிவுறுத்தினார். விசாரணையில், இந்த விடுதியை அரசு, பெண்கள் விடுதியாக அங்கீகரிக்கவில்லை, குழந்தைகள் காப்பகமாகவும் இது பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்தது. வழக்கம்போல கிறிஸ்தவ நிறுவனங்கள் இதற்கு எதிராக கூப்பாடு போட்டு வருகின்றன.