மேஷம்:
உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் முனைப்புடன் பணியாற்றவும். அதே சமயம் பொருளீட்டுவதில் திறமை அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். முக்கிய நபர்களால் உதவி பெற்று வளர்ச்சி கூடும்.
பெண்மணிகள்: ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உடல் நலனுக்கேற்ற உணவுகளை மட்டும் ஏற்கவும். விருந்து விசேஷங்களில் குற்றம், குறை பற்றி பேசாதீர்கள்.
மாணவ மணிகள்: பொது விவகாரங்களால் மனநிலை பாதிக்கப்படும். வாகனங்களில் மித வேகம் தேவை.
சிறுதொழில், வியாபாரம்: அரசு ஆதரவு கிடைக்கும். கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. முயற்சி வெற்றி அடையும்.
அரசியல்வாதிகள்: உழைப்பிற்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.
ரிஷபம்:
உத்தியோகஸ்தர்கள்: பணியில் பதட்டம் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். காலம், நேரம் கருதி, பொறுமையை கடைபிடிக்கவும். சக ஊழியர்களால் சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் பணியில் கவனம் தேவை.
பெண்மணிகள்: திருமணமான பெண்களுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். இல்லறத் துணையுடன் இணக்கமாக இருக்கவும். எதிர்மறை எண்ணங்களுக்கு தடை போடுங்கள்.
மாணவ மணிகள்: புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொள்வீர்கள். வாகனம் கிடைக்கும். அறிவுபூர்வமாக சிந்தனை செய்யவும்.
சிறுதொழில், வியாபாரம்: பயணங்களால் சிலருக்கு பங்கம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகள்: காரிய தாமதம் ஏற்படலாம். தலைமைக்கு ஆதரவாக நடந்து கொள்ளவும்.
மிதுனம்:
உத்தியோகஸ்தர்கள்: தேவையற்ற மனக் குழப்பத்தில் இருப்பததை தவிர்க்கவும். அதே சமயம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு தக்க முடிவெடுக்கவும்.
பெண்மணிகள்: குடும்ப சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்காது. உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டாலும் சிகிச்சையினால் பலன் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
மாணவ மணிகள்: தேவையான அளவு மதிப்பெண் கிடைப்பதால் உயர்கல்வி, வேலைக்கான வாய்ப்பு அமையும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
சிறுதொழில், வியாபாரம்: வளர்ச்சி உண்டு. செலவும் அதிகரிக்கும். அரசு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
அரசியல்வாதிகள்: பொறுமையுடன் செயல்படவும்.
கடகம்:
உத்தியோகஸ்தர்கள்: பதவி உயர்வு, கெளரவம் ஆகியவை தேடி வரும். பிரச்சினை செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஞானமும், கீர்த்தியும் உண்டாகும். வாக்கு வன்மையினால் எதையும் சாதிப்பீர்கள்.
பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களாலும் தோழிகள், சகோதரர்களால் நன்மை உண்டு.
மாணவ மணிகள்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நினைத்தப்படி உழைத்து மதிப்பெண் பெறுவீர்கள். ஆசிரியர்கள் ஆலோசனை படி நடக்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்களிடையே வெற்றி கிடைக்கும். தனலாபம் உண்டு. புதிய இயந்திரங்கள் வாங்க முனைவீர்கள்.
அரசியல்வாதிகள்: சோதனைகளை வென்று சாதிப்பீர்கள். விருப்பமான பதவிகளை கேட்டுப்பெறுங்கள்.
சிம்மம்:
உத்தியோகஸ்தர்கள்: பணியில் இருந்த தடைகள் விலகும். சாதிக்கத் துடிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிலுவைத் தொகைகள், கொடுத்த கடன்கள் கிடைக்கும். பகையாளிகள் விலகுவார்கள். பயணங்களால் நன்மை உண்டு.
பெண்மணிகள்: குடும்ப நிகழ்ச்சிகளாலும், திருமணம் போன்ற சுபநிகழ்வுகளாலும் உற்சாகமாக இருப்பீர்கள். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். இளம்பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
மாணவ மணிகள்: கலை, இலக்கியங்களில் விருப்பம் அதிகரிக்கும். கல்வியிலும் சிறந்து விளங்குவீர்கள். பரிசும் பாராட்டும் கிடைக்கும்.
சிறுதொழில், வியாபரம்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஏற்றுமதி – இறக்குமதி தனலாபம் உண்டு. பங்குதாரர்களால் பங்கும் ஏற்படலாம். பெண்களிடம் எச்சரிக்கை தேவை.
அரசியல்வாதிகள்: அருகதை உள்ளவர்களிடம் மட்டும் ஆலோசனை பெறவும். தவறானவர்களைத் தவிர்க்கவும்.
கன்னி:
உத்தியோகஸ்தர்கள்: பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களின் செயல்களால் மன வருத்தம் உண்டாகலாம். பிரச்சினைகளை கண்டு கலங்காமல் பொறுமை காக்கவும். செலவுகளை கட்டுப்படுத்தவும். தைரியம் தேவை.
பெண்மணிகள்: உறவினர்களால் நன்மை இல்லை என்றாலும் துணிவான முடிவாய் வெற்றி பெறுவீர்கள். இல்லறத் துணையின் உதவியுடன் பல காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
மாணவ மணிகள்: சகோதரர்களாலும் குடும்ப நண்பர்களாலும் உதவி கிடைக்கும். உயர்க்கல்வி, உத்தியோகம் கிடைக்க வழி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் விற்பனை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
அரசியல்வாதிகள்: துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றிகளை காண்பீர்கள். எதிர்பாராமல் லாபம் கிடைக்கும்.
துலாம்:
உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணியில் நாட்டத்துடன் பணியாற்றுவீர்கள். பலவகைகளிலும் பேரும் புகழும் கிடைக்கும். உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் தெளிவான மனநிலையில் பணியாற்றுவீர்கள்.
பெண்மணிகள்: குடும்ப பணிச்சுமையில் உதவ வேலையாட்கள் அமையும். மனதிற்குப் பிடித்த வாகனம், வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆசியுடன் செயலாற்றுவீர்கள்.
மாணவ மணிகள்: படிக்கும் போதே பகுதி நேர வேலையினால் பணவரவு கிடைக்கும். கெளரவம் புகழ் கிடைக்கும். தேவையான மதிப்பெண் கிடைக்கும். எதிர்பாலினரிடத்தில் நெருக்கம் தவிர்க்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: புதிய ஒப்பந்தங்கள் பெற்று வருமானம் அதிகரிக்கும். ஊழியர்கள் உறுதுணை உண்டு.
அரசியல்வாதிகள்: வாய்ப்புகள் கிடைக்கும். வசதி அதிகரிக்கும்.
விருச்சிகம்:
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் பகை மாறும். இனிமையான வார்த்தைகளால் மீண்டும் நட்பு மலரும். வளர்ச்சிக்குறிய அறிகுறிகள் தெரியும். சிலருக்கு அந்தஸ்து உயரும். வேலை கிடைக்காதவர்களுக்கு சிறந்த வேலை அமையும்.
பெண்மணிகள்: நோய் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். இல்லறத் துணையின் அரவணைப்பும் கிடைக்கும். அந்தஸ்து உயரும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
மாணவ மணிகள்: சக மாணவர் மத்தியில் தலைமையேற்கும் நிலை ஏற்படும். பிறருக்காக வாதாடி, பரிந்துரைத்து செயல்படுவீர்கள். மதிப்பெண்ணும் அதிகரிக்கும், மதிப்பும் கூடும்.
சிறுதொழில், வியாபாரம்: அரசு நிறுவனங்களின் ஆதரவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.
அரசியல்வாதிகள்: அரசியலில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். வருமானம் உண்டு.
தனுசு:
உத்தியோகஸ்தர்கள்: பணியில் ஏற்பட்ட சச்சரவுகள் குறையும். சக ஊழியர்களின் நட்பும், புதிய நண்பர்களால் உற்சாகமும் பெறுவீர்கள். சிலருக்கு உழைப்பு வீணாகும். பிறருக்காக பணியாற்றுவீர்கள். விவாதம் தவிர்ப்பது நன்மை தரும்.
பெண்மணிகள்: நெடுநாட்களாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் நிம்மதி தரும். நோய் நீங்கி, ஆரோக்கியம் பெருகும். ஆடை ஆபரணங்கள் அணிந்து மகிழ்வீர்கள். இல்லறத்துணை ஆதரவு கிடைக்கும். சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மாணவ மணிகள்: உடங்களுடைய செயல்திறன் அதிகரிக்க தனிப்பயிற்சி மையங்களை நாடுவீர்கள். புதிய பொருட்கள் பரிசாகக் கிடைக்கும். கல்வியில் கவனம் வைப்பது நன்மை தரும்.
சிறுதொழில், வியாபாரம்: வருமானம் உண்டு என்றாலும் செலவும் உண்டு. பங்குதாரர்களை தக்க வைக்கவும்.
அரசியல்வாதிகள்: அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.
மகரம்:
உத்தியோகஸ்தர்கள்: மேன்மையான உங்களின் குணத்தினால் கடினமான பணிகளையும் செய்து சாதனை புரிவீர்கள். புதிய முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். பொருளாதாரம் உயரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
பெண்மணிகள்: ஆரோக்கியம் மேன்படும். சிலருக்கு சந்ததி விருத்தி ஏற்படும். வாக்கு வன்மையால் வளம் சேரும். தனவிருத்தியும் உண்டு, சந்ததி விருத்தியும் உண்டு. வசதி அதிகரிக்கும்.
மாணவ மணிகள்: பேச்சுத் திறனும், செயல் திறனும் அதிகரிக்கும். போட்டிகளில் வென்று பரிசுகள் பெறுவீர்கள். உதவிகள் பெற்று உயர்வடைவீர்கள்.
சிறுதொழில், வியாபாரம்: அந்நிய நாடுகளால் வளம் அதிகரிக்கும். கடினமான பணிகளை செய்து வருமானம் பெறுவீர்கள். புதிய வழியில் பயணிப்பீர்கள்.
அரசியல்வாதிகள்: வளர்ச்சிக்கான பணிகள் நடைபெறும். அந்தஸ்து உயரும். தலைமை அதிரிக்கும்.
கும்பம்:
உத்தியோகஸ்தர்கள்: உயர் பதவியும், சலுகையும் பெற்று அதிகாரத்துடன் பணியாற்றுவீர்கள். செல்வம் சேரும். சேமிப்பும் அதிகரிக்கும். விரும்பிய வாகனம் பெற்று மகிழ்வீர்கள். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
பெண்மணிகள்: மூத்த சகோதரர்களுக்கு உதவி செய்து உளம் மகிழ்வீர்கள். தேவையான பொருட்கள் வீட்டில் நிரம்பும். இல்லறத்துணையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பெண் குழந்தை பிறக்கும். திருமணம் சிலருக்கு அமையும்.
மாணவ மணிகள்: தீவிர விளையாட்டு, அதிவேகப் பயணம் தவிர்க்கவும். அனைவரிடம் பணிவாக இருக்கவும். படிப்பில் கவனம் அதிகம் தேவைப்படும். பெற்றோர் ஆசிரியர் அறிவுரை படி நடக்கவும்.
அரசியல்வாதிகள்: உங்களால் பயன்பெற்றவர்கள் தற்போது உதவுவார்கள். பெரிய பதவி கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: வியாபாரம் பெருகும் புதிய நிறுவனங்களின் ஆதரவால் தொழில் பெருகும். வருமானம் அதிகரிக்கும். ஊழியர்களை தக்கவைக்கவும்.
மீனம்:
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் உதவிப்பெற்று உயரடைவீர்கள். அதேசமயம் பிறரை பகைத்தும் கொள்வீர்கள். உழைப்பு அதிகரிக்கும். நிர்ணயத்திறன் குறையும். ஆதாயமற்ற பணிகளை செய்து சலிப்படைவீர்கள்.
பெண்மணிகள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். ஆரோக்கியம் மேன்படும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும். தனலாபம் உண்டு, தவறான நபர்களிடம் எச்சரிக்கை தேவை.
மாணவ மணிகள்: திட்டமிட்டு படித்துவந்தால் மட்டுமே சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள். வேடிக்கை, விநோதங்களில் விருப்பம் உண்டாகும். வேலை, உயர்க்கல்விக்கான நல்ல சேதி கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: வசதி, வாய்ப்பு, புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். சொல்லாற்றல் அதிகரிக்கும். பலரின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளவும்.
அரசியல்வாதிகள்: பொறுப்புகளை ஏற்கும் முன் சீர்தூக்கிப் பார்க்கவும்.