மேஷம்:
உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் ஆதரவினால் அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். கருத்துக்களை பொதுவெளியில் பேச வேண்டாம். சிலருக்கு வெளியூர் செல்வதால் வேலைகள் பாதிக்கப்படலாம். முக்கிய முடிவு எடுக்கும்முன் சிந்தித்து செயல்படவும்.
பெண்மணிகள்: வருமானம் வந்தவுடன் முதலில் சேமிப்பைக் குறித்து சிந்திக்க வேண்டும். வாரிசுகளின் உயர்க்கல்வி சம்பந்தமாக ஆலோசிப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும்.
மாணவ மணிகள்: வெளிநாட்டுக் கல்வி, வேலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கவும். வெளி விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
சிறுதொழில், வியாபாரம்: கடன் கொடுத்து, வாங்குவதை நம்பிக்கையானவர்களுடன் செய்வது நல்லது. தனலாபம் ஊக்கத்தை கொடுக்கும்.
அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
உத்தியோகஸ்தர்கள்: முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள், அலுவலக ரீதியான பயணங்களால் வளர்ச்சி, மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மையான வழிகளில் உபரி வருமானமும் கிடைக்கும். அரசு ஆதரவு தாமதமாகும். வரி கட்டுவதில் தாமதம் செய்ய வேண்டாம்.
பெண்மணிகள்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் மெளனமாக இருப்பது பிரச்சினையை தவிர்க்கும். பலரின் உதவி கிடைக்கும். புனிதயாத்திரை நற்பலன் தரும். இல்லறத்துணையின் மூலம் பொன், பொருள் சேரும்.
மாணவ மணிகள்: சாதுர்யமான பேச்சு, செயல்களால் பெருமை கிடைக்கும். எதிர்கால திட்டத்திற்கான முயற்சி பலிக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் அதிருப்தியை சந்திக்க வேண்டாம். கணக்குப் பதிவேடுகளை சரிபார்க்கவும்.
அரசியல்வாதிகள்: அலைச்சல், செலவு அதிகரிக்கும். வழக்குகளில் பிரச்சினையை சந்திக்க வேண்டியதிருக்கும்.
மிதுனம்:
உத்தியோகஸ்தர்கள்: பிரச்சினைக்குரிய சிலர் இடமாற்றம் செய்யப்படுவதால் நிம்மதி பிறக்கும். சிலருக்கு சிறந்த வேலையும் கிடைக்கும். உங்களின் யோசனைகளை அதிகாரிகள் ஏற்பார்கள். எதிர்பாரதவிதத்தில் ஊக்கத்தொகை, உயர்பதவி கிடைக்கும். அமைதியான மனநிலையை வளர்த்துக் கொள்ளவும்.
பெண்மணிகள்: இளம் பெண்களின் திருமணம் விருப்பத்துடன் நடைபெறும். இல்லறத் துணையுடன் இணக்கமாக இருங்கள். விருப்பத்துடன் வீட்டை அலங்கரிப்பீர்கள். கொடுப்பது, வாங்குவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் நலத்திற்கு சிகிச்சை அவசியம்.
மாணவ மணிகள்: சுகாதாரமான இடத்தில் மட்டும் உணவு ஏற்க வேண்டும். சிலர் உங்களை தவறாக புரிந்து கொள்வர். தனிமை இனிமை தரும்.
சிறுதொழில், வியாபாரம்: உதவி பெற்று வளர்ச்சி பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவுடன் துணிந்து செயல்படுவீர்கள்.
கடகம்:
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவார்கள். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. கடினமான பணிகள் எளிதில் நிறைவேறும்.
பெண்மணிகள்: அதிக அளவில் செலவு ஏற்படும் என்பதில் யோசித்து முடிவெடுக்கவும். உறவினர்களுடனும் இல்லறத் துணையுடனும் இணக்கமாக இருக்கவும். சிலருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். சிலர் தாய்மையுறுவார்கள்.
மாணவ மணிகள்: பரிசு பொருட்கள் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். கல்வியில் நாட்டம் தேவை. கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: சில ஒப்பந்தங்கள் நிறைவேறும். ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். போட்டியாளர்களை வெல்லும் சாமர்த்தியம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்: வளர்ச்சிக்கு தடை போட்டவர்கள் விலகுவார்கள். புதிய பொறுப்புகளை ஏற்று திறம்பட செய்து காட்டுவீர்கள்.
சிம்மம்:
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களுடன் சண்டை, சச்சரவு ஏற்படும் என்பதால் அமைதிகாப்பது அவசியம். அரசு வழியில் சில பிரச்சினை ஏற்படலாம். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செல்பாட்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
பெண்மணிகள்: உங்களது ஆர்வம் மூலமாக இல்லறத்துணை விருப்பத்தினை பூர்த்தி செய்வார். தேவையற்ற அலைச்சல், நோய் ஏற்படும். பொருள்களை பாதுகாக்க வேண்டும். மனச் சங்கடங்களை தவிர்க்க முயற்சி செய்யவும்.
மாணவ மணிகள்: ராகுவால் வெளிநாட்டுக்குச் செல்ல செய்த திட்டம் நிறைவேறும். நல்ல வேலையுிம் கிடைக்கும். உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை.
சிறுதொழில், வியாபாரம்: தொழில் அபிவிருத்தி அடையும். மதிப்பு மரியாதை உயரும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள்: தலைமை கொடுத்த பணியினை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தனலாபம் உண்டு.
கன்னி:
உத்தியோகஸ்தர்கள்: உழைப்பு அதிகரிக்கும். அதிக நேரம் உழைப்பதால் அயர்ச்சியும், மனத் தளர்ச்சியும் ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர் கணிசமான தனலாபம் பெறுவார்கள். மருத்துவ செலவு நீங்கும். கடன் நிவர்த்தி அடையும். நிலுவைத் தொகை கிடைக்கும். நிம்மதி பெறுவீர்கள்.
பெண்மணிகள்: உடல் வலி, போன்ற பிரச்சினைகள், தீரத் துவங்கும். இணக்கமான சூழ்நிலை இல்லத்தில் நிகழும். தோழிகளிடம் நட்புடன் பழகவும். பிறந்த வீட்டு உறவினர்களால் உதவி கிடைக்கும்.
மாணவ மணிகள்: ஆசிரியர், பெற்றோர், அறிவுரையை ஏற்கவும். உயர்க்கல்வி கனவுகள் நனவாகும். மதிப்பெண் கூடும்.
சிறுதொழில், வியாபாரம்: எவருக்கும் நிபந்தனையுடன் கூடிய வாக்குறுதி தராதீர்கள். தனித்து செயல்படுங்கள், தனலாபம் உண்டு.
அரசியல்வாதிகள்: சக கட்சியினரிடத்தில் போட்டி தவிர்க்கவும். தலைமை உத்தரவை நிறைவேற்றவும்.
துலாம்:
உத்தியோகஸ்தர்கள்: பதவி உயர்வும், உயர் அதிகாரியின் ஆதரவும் பெற்று மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் வாசம் நீங்கி உள்ளுரிலே நல்ல வேலையில் அமர்வார்கள். உபரி வருமானமும், சொத்துகளால் லாபமும் கிடைக்கும். அதற்கேற்றபடி செலவுகளும் ஏற்படும். புதிய நண்பர்கள் உதவுவார்கள்.
பெண்மணிகள்: சுக்கிரன் சிறந்த ஆடை, ஆபரணங்களைத் தருவார் என்றாலும் அவசர செலவுகளால் கையிருப்பு கரையும். இளம் பெண்களுக்கு வரன் அமையும். சகோதர பாசம் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு ஏற்படும். உடனுக்குடன் வைத்தியம் செய்து கொள்வது அவசியம்.
மாணவ மணிகள்: முன்னேற்றம் உண்டு. சகலவிதமான கலைகளிலும் சிலருக்கு ஆர்வம் ஏற்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: தொழில் சிறக்கும். விரிவு செய்யலாம். புத்திசாலித்தனத்தால் போட்டியாளர்களை வெல்லலாம்.
அரசியல்வாதிகள்: கவுரவப் பதவி பெற்றதால் பலரின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்:
உத்தியோகஸ்தர்கள்: வருத்தங்கள் நீங்கும். வசதிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடையே இருந்த பிணக்குகள் நீங்கிவிடும். புதிய வேலையும் கிடைக்கும். பதவி போட்டிகளில் வென்று மகிழ்வீர்கள். புதிய வேலையும் கிடைத்து, புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள்.
பெண்மணிகள்: இல்லறத்தில் இனிய சூழல் உருவாகும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் உற்சாகத்துடன் திகழ்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கடனிலிருந்து நகைகளையும் மீட்பீர்கள். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவ மணிகள்: உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற மதிப்பெண் கிடைக்கும். அறிவுத் திறனால் கல்வியில் முதன்மை பெறுவீர்கள். குரு அருள்வார்.
சிறுதொழில், வியாபாரம்: நிலுவைத் தொகை வசூலாகும். பைாய கடன்களை அடைத்துவிடுவீர்கள். தொழிலை விரிவு செய்யலாம்.
அரசியல்வாதிகள்: பிடிவாதம் தவிர்க்கவும். நட்பை வளர்த்துக் கொள்ளவும்.
தனுசு:
உத்தியோகஸ்தர்கள்: அதிக வேலையினால் அயர்ச்சி ஏற்படும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்காது. பொறுப்புள்ள பதவியை துறந்து, வேறு நிறுவனத்தில் சேரும் எண்ணம் ஏற்படும். சிலர் பகுதி நேர பணிக்குச் சென்று வருமானம் ஈட்டுவார்கள். எவரிடமும் நிர்வாகக் குறைகளை குறித்து பேச வேண்டாம். கவலை துறக்கவும்.
பெண்மணிகள்: குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறத் தேவையான தொகை குறித்து பேசப்படும். பலரின் உதவி கிடைப்தால் மகிழ்ச்சி ஏற்படும். இளம்பெண்களின் திருமணம் நிச்சயமாகி விடும். சிறுமிகளின் அறிவுத் திறனும் கலைகளில் தேர்ச்சியும் புகழும் அடைவார்கள். சிலருக்கு சந்ததி விருத்தி அடையும்.
மாணவ மணிகள்: உங்களின் தனித் திறனால் பாராட்டு, பரிசுகள் கிடைக்கும். கல்வியைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் தவிர்க்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: பணியாளர்களின் பணித்திறனை அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரிக்கும். காவல்துறை வழக்குகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
அரசியல்வாதிகள்: போட்டியாளர்களை வென்று தலைமையின் ஆதரவை பெறுவீர்கள்.
மகரம்:
உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். சக ஊழியர்களின் உதவி பெற்று வேலைகளை முடிக்க வேண்டியதிருக்கும். எல்லோருடனும் சுமுகமடாகப் பழக வேண்டும். இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வீடு கிடைக்கலாம். அந்தஸ்து உயரும். புதிய முன்னேற்றம் கிடைக்கும்.
பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி தரும். திருமணம் ஆன பெண்களுக்கு மகப்பேறு அடைவார்கள். பரிசு பொருட்கள் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வாரிசுகளால் மதிப்பு உயரும். இளம் பெண்கள் வாகனம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவார்கள்.
மாணவ மணிகள்: உடல் ஆரோக்கியம் பேணுவதில் அக்கறை வேண்டும். பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படாது. அதிக செலவு ஏற்பட்டாலும் சமாளிக்க முடியும். அரசு அதிகாரிகளோடு இணக்கமாக நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகள்: ஆதரவு அதிகரிக்கும். அதேசமயம் செலவும் அதிகரிக்கும்.
கும்பம்:
உத்தியோகஸ்தர்கள்: பணியில் விருப்பம் அதிகரிக்கும். வேலை பளு குறையும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். அதனால் உயர் பதவி, ஊதிய உயர்வும் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளிடம் சில சலுகைகளைப் பெற்று விடுவீர்கள். முன்னேற்றத்தை முனைந்து பெறுங்கள்.
பெண்மணிகள்: இல்லறத்துணையுடன் இணைந்து குடும்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். புகுந்த வீட்டு உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க பரிசும், பாராட்டுதல்களும் பெறுவார்கள்.
மாணவ மணிகள்: எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். சகலவிதமான நற்பலன்களும் உங்களை நாடி வரும். அமைதி தேவை.
சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் ஆதரவுடன் இருப்பார்கள். உயர்கல்விக்கு உதவித்தொகை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவான சூழ்நிலையில் ஆதிக்கத்தை நிலைநிறுத்துங்கள்.
மீனம்:
உத்தியோகஸ்தர்கள்: இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகும். உதவி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விடுங்கள். பல வகையிலும் வருமானம் கிடைக்கும். அரசு வழி ஆதாயமும் கிடைக்கும். தூக்கம் குறையும். தெளிவான மனநிலையுடன் செயலாற்றவும்.
பெண்மணிகள்: இல்லறத் துணையுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். அமைதியான முறையில் நடந்து கொள்ளவும். செலவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கத்தினரிடம் அந்தரங்க பிரச்சினைகளை பகிர வேண்டாம். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவும்.
மாணவ மணிகள்: செயல் ஊக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்தவும். உடல் நலன் பாதுகாக்கவும். நண்பர்களிடம் பகைமை தவிர்க்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: வியாபாரம் எப்போதும் போல இருக்கும்.
அரசியல்வாதிகள்: ஈர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். வழக்குகளால் பாதிப்பு இருக்காது.