வானம் கண் திறந்தது, ஹிந்து இயக்கத்தினர் மனம் கசிந்தது

வடகிழக்கு பருவமழையால் நவம்பர் மாதம் முதல் வாரம் முழுவதும் சென்னையின் தாழ்வான பல பகுதிகள் தண்ணீர் தேங்கி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிப்பட்டார்கள். இதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ். அன்பர்களும் ஹிந்து முன்னணி தொண்டர்களும் களம் இறங்கினார்கள். SEVAI1

மழையால் சாலைகளில் விழுந்திருந்த மரங்களையும் மின் கம்பங்களையும் அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய தோள்கொடுத்தார்கள். உணவுப் பொட்டலங்கள் தயாரித்து எடுத்துச்சென்று மழைபாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.

வட சென்னையில், குறிப்பாக பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அந்த ஹிந்து இயக்க அன்பர்கள் நிவாரணப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதைக் காட்டும் படங்கள் இவை.

– விஸ்வ சம்வாத் கேந்திரம், சென்னை