வளர்முகம் காணும் தேசிய மாணவர் சக்தி

திருச்சி சட்டக்கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்  இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்க்கை செய்துவந்துள்ளனர். கு.ஊ.ஐ (ஸ்டூடன்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) மாணவர்கள் இதைத் தடுக்க முனைந்ததோடு ஏ.பி.வி.பியின் மாணவர் தலைவரான காளீஸ்வரனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். எனவே, ஏ.பி.வி.பி யில் தலித்களுக்கு என்னடா வேலை என்று கூறியும் சாதிப் பெயரைக் கூறியும் எஸ்.எஃப்.ஐ.யினர் காளீஸ்வரனைத் தாக்கியதாகத் தெரிகிறது.  முதல்வரின் கவனத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கல்லூரி இனி இவ்வாறு நடக்காது என எழுதி வாங்கி இருதரப்பினரையும் திருப்பி அனுப்பியிருக்கிறார் முதல்வர்.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏ.பி.வி.பியினர் அரசு மருத்துமனையில் அட்மிட் ஆகவே, வழக்கு வரலாம் எனக் கருதிய எஸ்.எஃ.ப்.ஐ. யினர், எஸ். எஃப்.ஐயைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவி சத்யப்பிரியாவைக் கொண்டு காவல்துறையில் ஈவ் டீசிங் புகார் கொடுத்து ஏ.பி.வி.பியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏ.பி.வி.பி abvpமாணவர்களும் தாங்கள் தாக்கப்பட்டதற்கும் காளீஸ்வரன் ஜாதி ரீதியாக தாக்கப்பட்டதற்கும் புகார் அளித்து, எஸ்.எஃ.ப் ஐ. மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏ.பி.வி.பி சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தமிழகம் எங்கும் நடைபெற்றது. நாகர்கோயில், திருச்சி, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் மேற்படி நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இடையூறு செய்துள்ளனர் எஸ்.எஃப்.ஐ யினர்.

இதே திருச்சியில் 3 மாதங்களுக்கு முன்னர் ஏபிவிபி மீது காவல் துறை தாக்குதலை செய்துள்ளது.

தில்லி ஜே.என்.யூ விவகாரத்தை முன்னிட்டு  ஜே.என்.யூ.வில் நடந்தது என்ன  என்ற பிரசுரத்தை விநியோகம் செய்ததற்காக மதுரையில் ஏ.பி.வி.பி.யின் அமைப்பாளர் கிருஷ்ணா என்பவர் காவல்துறையினரால்  பலமாகத் தாக்கப்பட்டு, போராட்டம் வெடித்தது.

எல்லாமே தமிழகத்தில் ஏ.பி.வி.பி நன்கு வளர்ந்து விட்டது என்பதைத் தான் காட்டுகிறது. கருத்தியல் மோதல்கள் வன்முறை மோதல்களாக உருவெடுக்காமல் தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்குத்தான் உள்ளது. ஆனால் அரசோ ஏதோ காரணங்களால் சமூக விரோதிகளிடம்தான் பரிவோடு இருக்கிறது. ஊடகங்கள் இந்த மோதல்கள் பற்றி மௌனம் சாதிக்கின்றன. தேசபக்த ஏ.பி.வி.பியின் வளர்ச்சி இடதுசாரிகளுக்கும் மாணவர்களிடையே மதவாத, சாதிய அரசியல் செய்யும் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல, அரசுக்கும் என்ன செய்வது என்ற திகைப்பைத்தான் ஊட்டியிருக்கிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனிசா பஷீர் கான் என்ற துணைவேந்தர் (பொறுப்பு) உடந்தையுடன், பல்கலை பத்திரிகை வாயிலாக மத்திய அரசுக்கு எதிரான விஷமப் பிரச்சாரத்தை நடத்தப் பார்த்த இடதுசாரிகளின் தந்திரத்தை புதுவை ஏபிவிபியினர் அணிதிரண்டு, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்த்து முறியடித்தார்கள். துணைவேந்தரை மாற்றவேண்டும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சரிடம் கோரினார்கள்.