1969 ம் ஆண்டு இந்திய விண்வெளி துறையின் பொறுப்பாளர்கள் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டின் குலசேகரன்பட்டணத்தை தேர்வுசெய்து நிலஆர்ஜிதம் செய்துதர கோரி அப்போதைய மாநிலஅரசை கேட்க தமிழகத்துக்கு வந்தார். அது முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நோய் வாய்பட்டு கடைசி காலத்தில் இருந்த நேரம். அதனால் துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் தி மு கவின் மதியழகனை சந்திக்க வந்தார். முன்னரே அப்பாய்ண்ட்மென்ட் பெற்று காலையில் சந்திக்க வந்தவர் அமைச்சர் இரவில் உட்கொண்ட உற்சாகப்பணத்தின் தாக்கம் காரணமாக மதியம் 12மணி வரை கலையாததால் தூக்கத்தில் இருந்தார். நான்கு மணிநேர காத்திருப்புக்கு பின்னர் எழுந்துவந்து அமைச்சர் சாராபாயிடம் விஷயம் குறித்து பேசினார். ரஜினின் சிவாஜி பட ஸ்டைலில் எவ்வளவு முதலீடு 10% கமிசன் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மத்திய அரசின் அமைப்புக்கு தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும் நல்ல திட்டதிற்கு சுயநலத்தோடு முட்டுக்கட்டை போட்டது அன்றைய தி மு க அரசு. விஞ்ஞானியும் ஆட்சியாளர்களின் சுயநலத்தை எண்ணி வேறு வழியின்றி அருகிலுள்ள ஆந்திர அரசை நாடினார். தமிழ்நாட்டின் பழவேற்காடுக்கு மிக அருகில் உள்ள ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா என்ற பகுதியை விட்டுக்கொடுத்து கழி முகப்பகுதியான அந்த தீவு தற்போது தேசம் விண்வெளியில் செய்யும் சாதனைகளுக்கு முக்கிய பங்காற்றிக்கொண்டிருக்கிறது.
வளர்ச்சியை கமிஷனுக்காக தடுத்த திமுக – திமுக வால் பறிபோனதை பாஜக வால் பெற்றுள்ளோம்
தற்போதுவரை பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அந்த திட்டம் நமக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. சென்றமுறை ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழகத்தின் அதே தி மு க பத்தாண்டுகாலம் பதவியில் இருந்தது. பலமுறை பாராளுமன்றத்திலேயே தமிழக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் வாய்ப்பில்லை என்ற பதிலையே தந்து வந்தனர். தற்போது மோடி தலைமையிலான பா ஜ க அரசு பதவிக்கு வந்ததும் இந்த திட்டத்தை ஆராய்ந்து பார்த்து தற்போது இஸ்ரோவின் இயக்குனராக நாகர்கோவிலை சேர்ந்த சிவன்பிள்ளை மூலம் திட்டத்தின் ஆய்வுகள் முடிந்து தற்போது நாடளுமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணத்தில் இந்ததிட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் துவங்க உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் தென்னக மாவட்டங்களில் இருந்து பலர் வேலைவாய்ப்பிற்காக சென்னைக்கு இடம்பெயருவது குறையலாம். மேலும் புவிவட்ட பாதையில் ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரன்பட்டணமே ராக்கெட் ஏவுவதற்கு மிகவும் சாதகமான பகுதி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் தி மு க வால் பறிபோன நல்ல திட்டம் இன்று பா ஜ க அரசால் சிவன்பிள்ளை ஒத்துழைப்புடன் மீண்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் கடைக்கோடி நகரமான குலசேகரன்பட்டணத்தில் 60 ஆண்டுகால வளர்ச்சியை பின்னோக்கி தள்ளிய முந்தய திமுக அரசையும் அதன் அமைச்சர்களையும் என்னவென்று சொல்லுவது.