கொரோனாவை சீனா உலகிற்கு பரப்பியது முதல் அங்கிருந்து பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. தொழில் நிறுவனங்களின் கூட்டமைபான ஃபிக்கியின் ஆய்வறிக்கையில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களில் 70% பாரதத்தையே தங்கள் முதல் தேர்வாக கொண்டுள்ளன. தற்சார்பு இந்தியா திட்ட்த்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இது தொழில் நிறுவன்ங்கள் இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.