அதானி குழும விவகாரம் பாரதத்தில் மத்திய அரசின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் உலக கோடீஸ்வர முதலீட்டாளரார் ஜார்ஜ் சோரஸ். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக கண்டித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்வில் ஜார்ஜ் சோரசின் அறிக்கைக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “சோரஸ், நியூயார்க்கில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான, பணக்கார கருத்துடைய நபர் என்று நான் கருதுவேன். அவர் இன்னும் முழு உலகமும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தனது கருத்துக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறார். சோரோஸ் ஒரு வயதானவர், பணக்காரர், கொள்கை பிடிவாதமுள்ளவர் மற்றும் ஆபத்தானவர். அப்படிப்பட்டவர்கள் உண்மையில் கதைகளை வடிவமைப்பதில் முதலீடு செய்கிறார்கள். அவரைப் போன்றவர்கள், தாங்கள் விரும்பும் நபர் வெற்றி பெற்றால் தேர்தல் நல்லது என்று நினைக்கிறார்கள். தேர்தல் வித்தியாசமான முடிவைத் தந்தால், அதை குறைபாடுள்ள ஜனநாயகம் என்று சொல்வார்கள். ஆனால், இதையெல்லாம் ‘திறந்த சமூகத்தின் வாதம்’ என்ற போலித்தனத்தில் அழகு செய்வது தான் அவர்களது சிறப்பு. எனது சொந்த ஜனநாயகத்தைப் பார்க்கும்போது, நான் இன்று ஒரு வாக்காளனாக இருக்கிறேன். இது முன்னோடியானது. தேர்தல் முடிவுகள் தீர்க்கமானவை. கேள்விக்குள்ளாகாத ஒரு தேர்தல் செயல்முறை. மற்ற நாடுகளைபோல, தேர்தலுக்குப் பிறகு, யாரோ ஒருவர் நீதிமன்றத்திற்கு செல்பவர்கள் நாங்கள் கிடையாது” என கூறினார்.