மௌலானா தக்கீர் ரசா கான் ஒரு முஸ்லிம் அறிஞர், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் செயல்படும் இத்தேஹாத் இ மில்லத் கவுன்சில் என்ற அரசியல் அமைப்பின் தலைவர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர். புராதனமான காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதுதான் சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டடம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அந்த அமைப்பினுள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தௌக்கீர் ராசா, நகைப்பிற்கிடமான ஒரு விசித்திரமான கூற்றை முன்வைத்துள்ளார். அதாவது, “முன்பு கோயில்கள் இருந்த இடத்தில் பல மசூதிகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த கோயில்கள் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் இடிக்கப்படவில்லை, மாறாக, மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது அவை மசூதிகளாக மாற்றப்பட்டன” என்று கூறியுள்ளார். மேலும், வன்முறையை தூண்டும்விதமாக, ‘எனது முஸ்லிம் இளைஞர்கள் கோபப்படும் நாளில், அவர்கள் மீது நான் கட்டுப்பாட்டை இழக்கும் நாளில், இந்த இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நாளில், நீங்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது. மசூதிகளைத் தொடக்கூடாது, எதையும் வலுக்கட்டாயமாகச் செய்தால், முஸ்லிம்கள் அரசாங்கத்தை எதிர்ப்பார்கள்’ என மிரட்டல் விடுத்துள்ளார்.