வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு உதவி செய்யும் முஸ்லிம்கள்

உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படையினர் ஜூலை 26 அன்று அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு இருந்தனர். அதில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களும், பங்களாதேஷிகளும் போலி சான்றிதழ்களுடன் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற உண்மையை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி போலி பிறப்புச் சான்றிதழ்கள் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் ரேபரேலி காவல்துறையினர் ஜீஷான் என்பவனை கைது செய்து இருக்கிறது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

ரேபரேலியின் பலாஹி கிராமத்தில் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே வசித்து வந்துள்ள நிலையில், 819 முஸ்லிம்களின் பிறப்புச் சான்றிதழ்கள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல, நூருதீன்பூர் 8,000 மக்கள் தொகையைக் கொண்ட கிராமம். இருப்பினும், கிட்டத்தட்ட 12,000 நபர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் போலி பிறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. ரேபரேலியின் பலாஹி மற்றும் நூருதீன்பூர் கிராமத்தில் மட்டும் போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, உத்தரப் பிரதேசம் முழுவதும் இதன் நெட்வொர்க் பரவியிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இடம் பெற்றுள்ளனர்.  இதில், பலரின் மதத்தை ஹிந்துவாகவே காட்டியிருக்கிறார்கள். சுமார் 19,184 சான்றிதழ்கள் மோசடியாக விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது.

கிராம நிர்வாக அதிகாரி விஜய் யாதவ் என்பவரின் லாக் இன் ஐடியை இவன் போலியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   இதையடுத்து, விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளில் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஏராளமான பிறப்புச் சான்றிதழ்களை விசாரிக்க உ.பி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

விசாரணையில் பங்களாதேஷ் நாட்டின் குல்னா நகரைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள், அனைவரும் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் வழியாக ஊடுருவி இருக்கிறார்கள். பங்களாதேஷ் நாட்டின் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு லஞ்சம் கொடுத்து, பாரதத்தின் உள்ளே இவர்கள் நுழைந்துள்ளனர்.

இதன் பின்னணியில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் அன்னிய நாட்டு நிதியுதவியும் பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் ஊடுறுவியர்கள் வட மாநிலத்தவர் என்ற போர்வையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வசிக்கின்றனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் என்ற பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் கடந்த ஜூன் 28 அன்று கைது செய்யப்பட்டான்.   இவன்  ‘அன்சார் – அல் – இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உடையவன் என்பது தெரிய வந்தது.

அதேபோல கடந்த 2020ம் ஆண்டு ஐனவரி- மாதம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையில் பங்களாதேஷைச் சேர்ந்த பயங்கரவாதி ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது. அதன் பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இப்படி பயங்கரவாதிகளும், ஊடுறுவல்காரர்களும் தமிழகத்தை நோக்கி அடைக்கலம் தேடி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.        F