வக்ஃப் என்ற கொடிய சட்டம்…!

தேசிய பாதுகாப்பையும் சமூக சமநிலையையும் சீர்குலைக்கும் ஆபத்தான வக்ஃப் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா, மக்களவையில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றக் குழுவின் கூட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அடையாளத்தையும் அரசியலமைப்பு விதிகளையும் கேள்விக்குள்ளாக்கும் பல விதிமுறைகள் தற்போதைய வக்ஃப் சட்டத்தில் உள்ளன. எனவே இதை மறுஆய்வு செய்து சீர்திருத்துவது மிக அவசியமாகிறது.

இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் மத நோக்கங்களுக்காக சொத்துக்களை ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கமே வக்ஃப் கோட்பாட்டில் அடங்கியுள்ளது. நாட்டில் மத பிரிவினைகளை நிலைநிறுத்தி ஆட்சி செய்யும் திட்டமிட்ட முறைக்கு ஏற்ப 1936-ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் வக்ஃப் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரிவினைக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட இடம்பெயர்வுகளுக்கு பின், காங்கிரஸின் முஸ்லிம் சார்பு கொள்கை
யின் தொடர்ச்சியாக 1954-ல் நேரு அரசு பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம்களின் சொத்துக்களையும் வக்ஃபுக்கு மாற்றியது.

1995-ல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலும், 2013-ல் மன்மோகன் சிங் காலத்திலும் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் மூலம் காங்கிரஸ் அரசுகள் வக்ஃப் சட்டத்தை மிக ஆபத்தான முறையில் மாற்றியமைத்தன. 1995ன் வக்ஃப் சட்டத்தின் 40-வது பிரிவின்படி, ஒரு நிலம் வக்ஃப் என உறுதிப்படுத்தும் உரிமை வக்ஃப் வாரியங்களுக்கே வழங்கப்பட்டது. 2013 திருத்தத்தின் மூலம் எந்த நிலத்திலும் வக்ஃப் உரிமை கோரலாம் என்ற நிலை உருவானது. மேலும், இதை நீதிமன்றங்களில் கேள்வி எழுப்ப முடியாத விதிமுறையும் செய்யப்பட்டது.

1995-ல் 4.5 லட்சம் ஏக்கர் மட்டுமே இருந்த வக்ஃப் சொத்து, இன்று நாட்டில் 8.7 லட்சம் சொத்துக்களாக, 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 9.4 லட்சம் ஏக்கர் நிலமாக உயர்ந்துள்ளது. இது இயல்பான வளர்ச்சி அல்ல என்றும், பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகள் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை புறந்தள்ள முடியாது. இன்று, ரயில்வே மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக நிலச்சொத்து உள்ளது 32 வக்ஃப் வாரியங்களின் கைகளில்தான்.

தமிழ்நாட்டில் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயில் சொத்து தொடர்பான சர்ச்சை, வக்ஃப் சட்டம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலின் அளவை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வந்தது. இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட இந்த கோயிலும் வக்ஃப் சொத்து என்ற அடிப்படையற்ற உரிமைக்கோரல் எழுந்தது. இங்கே வக்ஃப் பெயரில் ஒரு முழு கிராமத்திற்கும் உரிமை கோரப்பட்டது.

கேரளத்தில் முனம்பத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் சொத்தில் வக்ஃப் உரிமை கோருகிறது. முறையற்ற நில ஆக்கிரமிப்புக்காக வக்ஃப் வாரியத்திற்கு எதிராக நாட்டில் 40,951 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது பிரச்சினையின் தீவிரத்தை காட்டுகிறது. வக்ஃப் சட்டத்தை தவறாக பயன்படுத்தி இஸ்லாமிய தீவிரவாதிகள் பரவலாக பொதுச்சொத்துக்களையும் பிற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களையும் கைப்பற்றுகின்றனர் வக்ஃப் பெயரில் சட்டவிரோதமாக சொத்து பறிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே என்ற உண்மையையும் மறக்கக்கூடாது.

நாட்டின் பாராளுமன்ற கட்டடமும் வக்ஃப் நிலத்தில்தான் உள்ளது என்று AIUDF தலைவரும் எம்.பி.யுமான பதருதீன் அஜ்மல் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச காவல்துறை தலைமையகம், டெல்லி வளர்ச்சி ஆணையக் கட்டடங்கள், பீகாரின் கோவிந்த்பூர் கிராமம், சூரத் மாநகராட்சி அலுவலகம், குஜராத்தின் துவாரகா தேவபூமியில் கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் அரண்மனையை ஒட்டியுள்ள தீவுகள் முதல் தெலங்கானாவின் மல்காஜ்கிரி குடியிருப்பு பகுதிகள் வரை வக்ஃபின் கழுகுப் பார்வை சுற்றிக்கொண்டிருக்கிறது.

கர்நாடகாவின் விவசாயிகளும் முனம்பத்தின் மீனவர்களும் உட்பட வக்ஃப் பயங்கரவாதத்தின் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு வலுத்த நேரத்தில்
தான், கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள விவசாய நிலம் ஒரே இரவில் வக்ஃப் பெயருக்கு மாற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இத்தகைய உண்மைகள் அனைத்தையும் புறக்கணித்து, மத தீவிரவாதிகளை திருப்திப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் கேரள சட்டசபை ஒற்றுமையாக வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான அப்துல் நாசர் மதனியின் விடுதலைக்காகவும், நமது அண்டை நாடுகளில் துன்புறும் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் வக்ஃப் சட்டத்தை ஆதரித்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

பல தீவிர இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாத வக்ஃப் என்ற கொடிய சட்டம் மத ஆதிக்கத்தையும் மத பேரரசு வாதத்தையும் வலுப்படுத்தவே உதவும். மத திருப்திக்காக தேசிய நலன்களையும் திருவுளம் போல தியாகம் செய்த குறுகிய அரசியல் தலைமை முன்வைத்த வக்ஃப் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதும், நாட்டுக்கு எதிரானதும், அதேபோல மதத்திற்கு எதிரானதுமாகும். இதனை சட்டப்படி மாற்றியமைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அவசியமானதும் பாராட்டுக்குரியதுமாகும்.

நன்றி : கேசரி வார இதழ், கேரளம்