வகை பிரித்து கல்வி விற்பனை

மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கும் நபர்கள் தங்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கூற முன்வருவார்களா, ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்வி தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறுவார்களா? அரசியல்வாதிகளும் திரை பிரபலங்களும் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்பிப்பதை நிறுத்துவார்களா? ஏழை மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்? ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரர்களுக்கு வேறு ஒரு வகை கல்வி என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்படுகிறது. இவர்கள் தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்ற உண்மையை தெரிவித்து விட்டு அதன்பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதே சரியானது என்று அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.