லோக்சபா துணை சபாநாயகரும் பா.ஜ., எம்.பி.,யுமான ரமாதேவி குறித்து கடந்த வாரத்தில் நடந்த லோக்சபா விவாததத்தில் ஆஸம் கான் தரம் தாழ்ந்து பேசினார். ” உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து உங்களை பார்க்க வேண்டும் எனது கண்கள் விரும்புகிறது ” இவ்வாறு கூறி இருந்தார்.
இவரது பேச்சுக்கு பெண் எம்.பிக்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து , ஆசாம்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று அவை கூடியதும், ஆசாம்கானும், அவரது கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசினர். மேலும் அவையில் ஆசாம்கான் பகிரங்க மன்னிப்பு கேட்டார். என்னுடைய பேச்சில் எவ்வித உள் நோக்கமும் இல்லை. மன்னிப்பை ஏற்க ரமாதேவி மறுத்தார்.
ஆசாம்கான் மன்னிப்பை ஏற்று கொள்வதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அவையில் தெரிவித்தார்.