சோவியத் யூனியன் 1988ல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சமயம், காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதற்காகவே அல்காய்தா அமைப்பினர் பெஷாவரில் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் ஒரு தகவல் மையம் ஏற்படுத்தினார்கள். இதன் பொறுப்பாளராக இருந்த உஸ்தாத் பரூக் என்பவன் இந்தியா, பங்களா தேஷ், மியான்மார், தாலாந்து, இலங்கையில் உள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அமர்த்தப்பட்டவன்.
2012ல் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு கலவரம் நடந்தது. போடோ மக்களுக்கும் ஊடுருவிய பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் அது. மியான்மர் நாட்டில், 2012ல் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிட்டகாங் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் ஊடுருவினார்கள். இவ்வாறு ஊடுருவியவர்களுக்கும் போடோ மக்களுக்கும் ஏற்பட்ட கலவரம் தான் அது. ஏற்கனவே ‘முஸ்லிம் யுனைடெட் லிபரேஷன் டைகர்ஸ் ஆப் அஸ்ஸாம்’ அமைப்பினருக்கும் ரோஹிங்கியர்களுக்கும் உள்ள உறவின் காரணமாக ஊடுருவியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கலவரம் மூண்டதாக பாரத அரசின் உளவு அறிக்கை தெரிவித்தது.
அர்த்தமற்ற கேள்விகள்
இந்திய அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அறிவுஜீவிகள், மலேசியா, இந்தோனேஷியா போன்ற முஸ்லிம் நாடுகள், படகுகள் மூலமாக சட்ட விரோதமாக உள்ளே நுழைய முயன்ற ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்காமல் திருப்பி அனுப்பின. ஈரான், ஈராக், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள் பொருள் உதவி மட்டுமே கொடுக்க முன் வந்தன. தெரியாதா இவர்களுக்கு? திபெத்திலிருந்து லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளார்களே, இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்கள் தமிழகம், ஒரிஸ்ஸாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்களே, இவ்வாறு இருக்கும் போது, ஏன் ரோஹிங்கியா முஸ்லிம்களை மட்டும் அகதிகளாக தங்க வைக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சில அதிமேதாவிகள். அகதிகளாக தங்கியுள்ள திபெத்தியர்களும் இலங்கை ஹிந்துக்களும் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இல்லை. பயங்கரவாத தாக்குதல்களில் இவர்கள் ஈடுபடவில்லை. ஒப்பிட வந்து விட்டார்களே ஞானசூனியங்கள்!
இறுதியாக உச்ச நீதிமன்றம் மனிதாபிமான முறையில் இதை அணுக வேண்டும் என்கிறது. இதே நீதிபதிகள் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னர், ஏன் உளவுத் துறையினர் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியையும் நாளை எழுப்புவார்கள். ஆகவே, பாதுகாப்பு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக் கூடாது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது யார்? காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளான உமர் பரூக், யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகளும் தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களும் தடை செயப்பட்ட சிமி இயக்கத்தின் முன்னாள் தலைவரும் ‘மனித நேய’ மக்கள் கட்சியின் ஜவாஹிரூல்லா போன்றவர்களும்தான்! ஆகவே மத்திய அரசு எவ்வித தயக்கமும் இல்லாமல், சட்ட விரோதமாக உள்ளே நுழைந்த ரோஹிங்கியா முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.