ரிக்ஷா தொழிலாளி மகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி, லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் உள்ள டோம்ரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கள் கேவத், ரிக்சா ஓட்டும் தொழிலாளி. கடந்த 12ம் தேதி தனது மகள் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அழைப்பிதழை தனது தொகுதி எம்.பி.,யான பிரதமருக்கு வழங்க எண்ணி, அவரது அலுவலகத்தில் வழங்கினார். இதன் பின்னர், சிறிது நாட்கள் கழித்து, கேவத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. அதனை பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த கடிதத்தில், மகளின் திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

இது தொடர்பாக கேவத் கூறுகையில், முதல் திருமண அழைப்பிதழை பிரதமருக்கு அனுப்பினேன். அழைப்பிழை, டில்லி சென்று பிரதமர் அலுவலகத்தில் வழங்கினேன். பின்னர் 8ம் தேதி பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்து தெரிவிதது கடிதம் வந்தது. சமூகத்தின் கடைசி மனிதரையும் பிரதமர் எவ்வாறு மதிக்கிறார் என்பதற்கு இந்த கடிதமே சாட்சி, என்றார்.

கேவத் மனைவி ரேணு தேவி கூறுகையில், உ.பி., வரும் பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எங்களது குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி அவரிடம் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.