தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “அயோத்தி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி. ராமர் தான் அயோத்தியில் பிறந்தார்; மாறாக கடவுளின் கடைசி தூதர் என்று அழைக்க்கப்படும் முகம்மது நபிகள் அல்ல என்பது முஸ்லீம் சகோதரர்களுக்கும், இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.மாநிலத்திலும், மத்தியிலும் நிலையான அரசாங்கம் தேவை. நிலையான ஒரு ஆட்சி இருந்தால் மட்டுமே உலக அளவிலும் இந்தியாவுக்கென தனி அதிகாரம் கிடைக்கும். ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் மக்கள் நல்ல ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஒரு நல்ல மனிதர்; நேர்மையானவர்; ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டார்’ என்று கூறினார்.
மேலும், நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் தீவிரவாதம் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.