உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ராமஜென்மபூமி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடவுள் பிறந்த இடத்தை பற்றிய வழக்கில் அதை ஒரு வாதியாக வைக்க முடியுமா என கேள்வி கேட்டார். அதற்கு ராம் லலா சார்பில் வாதாடிய வக்கீல், வழிபடக்கூடிய புனித இடத்தை பொறுத்த வரையில் அதற்கு சிலை இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆறுகளையும் சூரியனையும் இந்து மதத்தில் வழிபடுகிறார்கள், எனவே பிறந்த இடத்தையும் சட்டபூர்வ நபராக நம் கருத வேண்டும் என்றார்.
ஒரு வழக்கில் ஆறுகள் வாதியாக முடியும் என்று உத்தரகாண்ட் மாநில வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டிப் பேசிய அவர், அதுபோல பிறந்த இடமும் வாதியாக ஆக முடியும் என்றார். இதற்கு லண்டனில் நடைபெற்ற புத்தூர் நடராஜர் சிலை தொடர்பான வழக்கின் வாதமும் சரியாக இருக்கும் என நம்புகிறேன் . லண்டன் வழக்கில் வாதாடிய மியூசியத்தின் வழக்கறிஞர் வழிபாடு இல்லாத கட்டாந்தரையான ஒரு இடத்திலேருந்து இந்த சிலை எடுத்துவரப்பட்டு ஒருவரால் விற்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு கோயில் இல்லாதபோது அந்த கோயிலுக்காக இந்த சிலையை கேட்டு உரிமை கோர முடியுமா என்று கேள்வி கேட்டபோது இந்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அங்கு கோயில் இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஒரு பக்தர் வழிபட வந்தாலே கோயிலாகிவிடும், அதற்கு கட்டடமோ பூஜாரியோ சிலையோ தேவை இல்லை. எந்த விதமான அடையாளம் இல்லை என்றாலும் கூட வெறும் நிலத்தில் உள்ள மண்ணே போதுமானது கோயில் இருந்த இடத்தில எத்தனை வருடம் கழித்தாலும் பக்தன் ஒருவனால் என்றாவது வழிபடப்படும் போது அந்த பூமி மீண்டும் கோயிலாக மாறிவிடும் என்று வாதிட்டார். அதனை இங்கிலாந்து நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சிலையை திருப்பியளித்தது என்பது குறிப்பிட தக்கது. நூற்றாண்டுகளாக அந்த இடம் தொழுகை இல்லாமல் இருந்தது. மேலும் மசூதிக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருந்தது. பெரும்பாலான பூர்வகுடிகளான இந்து மக்களால் அது ராமபிரானின் ஜென்மஸ்தான் என்று நம்பப்படும் போது அதனை எப்படி நீதிமன்றம் மறுக்கமுடியும்? கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை அந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்பது எப்படி பெத்தலேகத்தில் மாட்டு தொழுவத்தில் இயேசு பிறந்தது நம்பிக்கையோ எப்படி மெக்கா மதினா நபியின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறதோ அதனை போன்றே இந்துக்களின் நம்பிக்கையும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை .
இந்த நேரத்தில் பாபர் மசூதி நடவடிக்கை குழு அடிக்கடி அந்த இடம் ராமஜென்மபூமி என்பதை நிருப்பித்தால் நாங்கள் எங்கள் உரிமையை விட்டு கொடுக்க தயார் என்று சொல்லி வந்ததே அந்த வாக்குறுதியை காப்பற்ற வேண்டும். வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களும் மன்னர்களும் நம்பிக்கை துரோகம் செய்யாதவர்களாக இருந்ததே இல்லை. வஞ்சகர்களாகவும் நம்பிக்கை துரோகிகளாகவும் தான் இருந்திருக்கிறார்கள். அதனை இந்த சமூகம் மாற்றிக்காட்டட்டும் பின்னர் மற்றவற்றை பற்றி பேசலாம்.