பிரதமர் மோடி தனது நண்பர்களின் ரூ. 16 லட்சம் கோடியைத் தள்ளுபடிசெய்தார். ஆனால், விவசாயிகளின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும். பயனற்ற பிரச்சினைகளை பற்றி மட்டுமேமோடி பேசுகிறர்.
வேலைவாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான குற்றங்கள் ஆகியவற்றை பற்றியும் பேசுமாறு அவருக்கு சவால் விடுகிறேன் என்று மக்களவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சரும், அமேதி மக்களவை தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இரானி கூறியதாவது: ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும்பாஜகவுடன் விவாதம் செய்ய எந்த சேனல், தொகுப்பாளர், இடம், நேரம்,விவாதத்துக்கான தலைப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு சவால் விடுக்கிறேன். ஒரு பக்கம், அண்ணன் – தங்கைஜோடியும் மறுபுறம் பாஜகவின் செய்தித் தொடர்பாளரும் இருக்கட்டும். எல்லாம் தெளிவாக இருக்கும். எங்கள் கட்சியிலிருந்து சுதான்ஷு திரிவேதி போதும். அவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றார்.