* சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அரசு ரயில் இன்ஜின் ஓட்டுனர்களுக்கு கழிப்பிடத்தை இன்ஜினிலேயே அமைக்க முன்வந்தது. காலத்தாமதமான திட்டமாக இருந்தாலும் அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்று.
* ரயில் பாதைகளை பராமரிப்பு பணி மற்றும் ரயில் விபத்துகளை தடுக்கும் வேலைகளை செய்யும் கேங்மேன் பிரிவிற்கு கையடக்க தகவல் பரிமாற்றத்துக்காக கருவி தரும் திட்டம்.
* ரயில் நிலையங்களில் தலையில் சுமைகளை தூக்கிச் செல்வோரை இதுவரை கூலி என்று கூறிவந்ததை இனி உதவியாளர் என்று பெயரிட்டு அவர்களின் கௌரவத்திற்கு வழிவகுத்தது.
* எளிமையான உருவத்தில் உறுதியான நல்லெண்ணத்துடன் ரயில்வே தொழிலாளர்கள் குடியிருப்புகளில் வாழ்ந்த தேசிய சிந்தனையாளர் தீன்தயாள்ஜி பெயரில் திட்டம்.
* ரயில்கள் வேக அதிகரிப்பு, அகல ரயில் பாதையாக மாற்றல், இருவழி 3 வழிப்பாதை அதிகரித்தல், மின்மயமாக்கல்.
* கட்டண உயர்வு இல்லை.
* 40ஆயிரம் கோடியில் இரு தொழிற்சாலை துவங்க உள்ள அறிவிப்பு.
* பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, முதியோர் காண ஒதுக்கீடு 50% உயர்வு.
* பச்சிளம் குழந்தைகளுக்கு பால், மருத்துவ தேவைகளுக்கு உறுதி.
* முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தொலைதூர அதிவேக ரயில்களில் மொபைல்களுக்கான சார்ஜ் செய்ய வசதி.
சிறுசிறு செயல்களாக பார்வைக்குப் பட்டாலும் இந்த அரசாங்கம் அடிமட்ட தொழிலாளர்கள் பற்றிய சமூக சிந்தனை கொண்டதாக உள்ளதை உணர்த்துகின்றன இந்த அறிவிப்புகள்.
ரயில்வே துறையில் கட்டமைப்பை மறுசீரமைத்தல், திட்டங்களுக்கான நிதி திரட்டலில் சுயசார்பு, நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல் என்ற முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.
வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு மேலும் தேவைப்படும் புதிய ரயில் பாதை /புதிய ரயில்கள் திட்டத்தில் தேவைப்படும் நிதிதேவைகளுக்கு மாநிலங்களும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் எனக் கூறும் ரயில்வேத் துறை ரயில் பாதைகளே பார்த்திடாத மேகாலய, மிஜோராம், போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு எந்தவித நிபந்தனை இன்றி புதிய ரயில்கள்/ பாதைகள் திட்டங்கள் அந்த பகுதிகளில் பொருளாதார உயர்வுக்கும் பாரத தேச பாதுகாப்புக்கும் வழி வகுக்கும் செயல் என்பதால் பாராட்டவேண்டிய ஒன்று.
மொத்தத்தில் உலக பொருளாதார மந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க வல்ல நல்ல திட்டங்களை கொண்ட நல்ல பட்ஜெட்.