இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்ப்டம் போலவே நாடு முழுவதும் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மதவாத அமைப்புகள், சிறுபான்மை வாக்குவங்கி அரசியல் மட்டுமே செய்து பழகிவிட்ட சில அரசியல் கட்சிகள் ஆகியவை இப்படத்தை தடை செய்யக்கோரி போராடி வருகின்றன. கேரளவில் இந்த படம் ஓடிக்கொண்டு இருந்தலும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியாளர்களின் மறைமுக அழுத்தத்தால் இத்திரைப்படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. மேற்கு வங்க அரசு இப்படத்தை தடை செய்தது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்த்தார். அவருக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அவருடன் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, மாநில பா.ஜ.க தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி, மாநில அமைச்சர்கள் சென்றிருந்தனர். அவர்களுடன் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் இந்த திரைப்படத்தை பார்த்தனர். திரைப்படத்தை பார்த்த பின் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எனது அமைச்சரவை சகாக்களுடன் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தேன். இந்த திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்தார். இந்த சூழலில், பல வடமாநிலங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் போஸ்டர்களை இளம்பெண்கள் வீதிவீதியாக ஒட்டி வருகிறார்கள். இந்த படம் பார்த்த ஹிந்து பெண்கள், லவ் ஜிஹாத் வலையில் விழாமல் இருக்க உதவும். விட்டில் பூச்சிகளாக லவ் ஜிஹாத் வலையில் விழும் இளம்பெண்களுக்கு இப்படம் ஒரு பாடம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.