முஸ்லிம் நாடுகள் என்றும் கிறிஸ்தவ நாடுகள் என்றும் உலகம் இரண்டு பட்டுக் கிடப்பதால் அனைவரையும் இணைக்கும் யோகா அருமருந்தாக உலகில் பவனி வருகிறது. சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என்ற பாரதத்தின் தீர்மானத்தை ஆண்டு 2015ல் ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது மிகத் தெளிவான அடையாளம்,
தாமாக முன்வந்து 177 நாடுகள் இந்த தீர்மானத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டன. அவற்றில் 47 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். எந்த ஒரு நாடும் எதிர்க்கவில்லை. யோகாவை உலகம் முழு மனதுடன் வரவேற்றது நிரூபணம் ஆயிற்று. அந்த ஆண்டு 192 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
யோகாவை உலகுக்கு வழங்கியது பாரதம் தான் என்றாலும் முன்னெப்போதும் கண்டிராத அளவு 190 நாடுகளுக்கு மேல் யோகா தினத்தை வரவேற்று ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
யோகா என்றதும் யோக சூத்திரங்களை வகுத்தளித்த பதஞ்சலி முனிவர், யோகாவை உலகெங்கும் பரப்பிய பி. கே. எஸ் ஐயங்கார் போன்றவர்கள் பெயர் நினைவுக்கு வரும். உண்மையில் 3,000 ஆண்டுகளுக்கு முன் திருமூலர் யோகாவை பரிந்துரைக்கும் பிரம்மாண்டமான ‘திருமந்திரம்’ நூலை சரளமான தமிழில் வழங்கியிருப்பது பொதுவாக பலருக்கு மறந்து போகிறது. யமம், நியமம் உள்ளிட்ட யோகத்தின் எட்டு அங்கங்களை பின்
வருமாறு திருமூலர் பட்டியலிடுகிறார்:
“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே”
(திருமந்திரம் – 552).
தமிழ் உள்ளம் என்றென்றும் போற்றி வரும் பதினெண் சித்தர்களில் திருமூலர் தலையாயவர் என்றால் கோரக்கர் என்று அறியப்படும் கோரக்நாத் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவ சமுதாயம் பயப்படவில்லை!
யோகாவை பாரதநாடு முழுவதும் பரப்பிய இன்னொரு உன்னத சித்தர். இவரது ஜீவசமாதி நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ளது.
கோரக்கரின் மரபில் வந்த ஸ்வாத்மாராமர் என்ற மகான் இயற்றிய ஹடயோக பிரதீபிகை என்ற அரிய நூல் தான் யோகாவை நாடிவரும் மாணவர்களும் யோக மார்க்கத்தில் நடைபோடும் யோகியரும் பின்பற்றுகிற ஆவணம். காரணம், இந்த நூலுக்கு தனது முன்னோர்களின் யோக நெறியையும் தனது சொந்த யோக சாதனை அனுபவங்களையும் ஆதாரமாக அமைத்துள்ளார் ஸ்வாத்மாராமர்.
யோகாவுக்கு தமிழக மண் செய்துள்ள பங்களிப்பு ஈடு இணையற்றது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பரிபூரண யோகியாக வலம் வந்த சதாசிவ பிரம்மேந்திரர், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் நூலுக்கு ‘யோக சுதாகரம்’ என்ற பெயரில் உரை அருளிச் சென்றிருக்கிறார். உலகில் யோக நாட்டம் உள்ளவர்கள் பதஞ்சலியை புரிந்துகொள்ள சதாசிவ பிரம்மேந்திரர் படைத்த நூலை சரணடைகிறார்கள். இதெல்லாம் இதுவரை; ஆனால் இனி?
எதிர்காலம் நம் முன் வைக்கும் சவால்தான் கவனம் கவர்கிறது. ஒரு லட்சம் யோக ஆசிரியர்கள் இங்கே உருவாகி உலகெங்கும் பரவவேண்டும் என்பது பாரத அரசின் கனவுத் திட்டம். அதை நனவாக்குவதில் யோக நறுமணம் கமழும் தமிழ் மண் முக்கிய பங்காற்றியே தீரவேண்டும்.
மக்களின் மனம் கவர் விதத்தில், பணி நியமனத்தில் யோகாவுக்கு முன்னுரிமை உண்டு. யோகாவை அந்த வகை விளையாட்டுகள் பட்டியலில் சேர்த்து ஆணையும் வந்தாயிற்று.
“பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தே போய் இருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனை
கள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள், இவற்றால் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை
ஒரு நாளேனும் தவற விடாதே” என்று சொல்லி
விட்டுப் போயிருக்கிறார் பாரதியார்.