மத வெறுப்பைத் தூண்டும் நோக்கில் போலியான, பாரதத்துக்கு எதிரான செய்திகளைப் பரப்பியதற்காக பாரதத்தை சேர்ந்த 7 யூடியூப் சேனல்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானிய யூடியூப் சேனலை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதேபோன்ற காரணங்களுக்காக இதுவரை 102 யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ‘தடை செய்யப்பட்ட சேனல்கள் சமூகங்களுக்கு இடையே மத வெறுப்பை தூண்டும் நோக்கத்தில் போலியான, பரபரப்பான செய்திகளை ஒளிபரப்புவது கண்டறியப்பட்டது என்றும், இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பாரத வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்த போலியான, தவறாக வழிநடத்தும் செய்திகளை அடிக்கடி வெளியிட்டன. முக்கிய செய்தி சேனல்களின் லோகோ மற்றும் பிரபலமான செய்தி தொகுப்பாளர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி இவற்றில் போலியான செய்திகள் வெளியிடப்பட்டன’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சேனல்களின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 144 கோடிக்கும் அதிகம். 85 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் அதில் சேர்ந்துள்ளனர். 73 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.