மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து உறுதிமொழிகளுக்கு இணங்க உ.பி.யின் அக்பர்பூரின் பெயர் மாற்றம் செய்யப்படும். காலனித்துவத்தின் அனைத்து தடையங்களும் இந்தியாவிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம். அந்த வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி ஆட்சிக்கு வரும் நிலையில் இந்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டு நமது பாரம்பரியம் காக்கப்படும் என்றார்.
அக்பர்பூர் மட்டுமல்லாமல் உபி.யில் உள்ள அலிகார், அசம்கார், ஷாஜஹான்பூர், காசியாபாத், ஃபிரோசாபாத், ஃபரூக்காபாத் மற்றும் மொரதாபாத் போன்ற பல பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.