1.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மோடி இணைந்து பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 50,000 அமெரிக்க வாழ்இந்தியர்கள் கலந்து கொண்டனர். ஹவுடி மோடி என்ற இந்த நிகழ்ச்சியில் இரு நாட்டு தலைவர்கள் கைகோர்த்தபடி அரங்கை வலம் வந்த நிகழ்வு, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
2. ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் நடந்த தட்பவெப்ப நிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, எதிர்பாராத பார்வையாளராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்.
3. பின் நியூயார்க்கில் நடந்த சர்வதேச காப்பீட்டு திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றி மோடி, இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மக்களின் சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாக விளக்கமாக எடுத்துரைத்தார்.
4. செப்.,25 அன்று முதல் முறையாக பிரதமர் மோடி, பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். வளர்ச்சி, புதுபிக்கதக்க வகையிலான மின்னாற்றம், தேசிய பேரிடர் மறு கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
5. ஐ.நா.,வில் காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காந்தியின் கொள்கைகள் குறித்து மோடி பேசினார். இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் ஐ.நா., கட்டிடத்தின் மீது சோலார் பார்க் அமைக்கப்பட்டது.
6. இந்தியாவில் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. பில் – மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த விருதினை பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
7. செப்.,25 அன்று உலக தொழில் கூட்டமைப்பினரினர் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடியின் அழைப்பு செய்தி கொண்டு சேர்க்கப்பட்டது. இந்தியா ஸ்டார் சிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு மோடி கேட்டுக் கொண்டார்.
8. அ மெரிக்காவின் முக்கிய சிஇஓ.,க்கள், 40 க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
9. செப்.,26 அன்று ஈரான் அதிபர் ஹாசன் ரவுனியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
10. அமெரிக்க பயணத்தில் தனது கடைசி நிகழ்ச்சியாக ஐ.நா., சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மீது பாக். , பிரதமர் இம்ரான் கான் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும், காஷ்மீர் மற்றும் பாக்., பற்றி எதுவும் குறிப்பிடாமல் உலக அமைதி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழில் யாதும் ஊரே; யாவரும் கேளிர் என மேற்கோள் காட்டி மோடி பேசியது பலரையும் கவர்ந்தது