மொழியால் மட்டுமே ஒரு தேசத்தை கட்டமைக்க முடியாது!

உண்மையில் இவர்கள் சொல்வது போல ஒரு மொழிக்கு எல்லாம் ஒரு  தேசம் தர முடியாது.

அப்படியானால் தமிழுக்கென்று ஏன் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று இருந்தது?

உடனே இவர்கள் ஐரோப்பாவைப் பார் – ஃபிரெஞ்சு மொழி பேசினால் ஃபிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசினால் ஜெர்மனி, போலிஷ் பேசினால் போலந்து… என்று அடுக்குவார்கள்.

ஆனால் உள்ளே புகுந்து பார்த்தால் ஜெர்மன் மொழிக்கான (Deutsch) தேசம் ஜெர்மனி மட்டுமல்ல. அதை அவர்கள் Deutschland என்றுதான்  குறிப்பிடுகிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் ஆஸ்திரியாவிலும் பெரும்பான்மை மொழி – ஜெர்மன் மொழிதான்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் மொழி பேசும் என் தாய்மொழி வழிச் சொந்தங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் – அவர்கள் எல்லாரும் Third Reich எனப்படும் மூன்றாவது ஜெர்மானியப் பேரரசின் மக்கள் – என்று கூறி ஹிட்லர் ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைத்தான். அது மட்டுமல்ல – தற்போது செக் குடியரசின் பகுதியாகிய Sudentenland ஜெர்மானிய மொழி பேசுவோர் பெருமளவில் வசிக்கும் பகுதி – எனவே அது ஜெர்மனியின் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக வேண்டும் என்று கேட்டான்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு – ஹிட்லரால் ஜெர்மனியோடு இணைக்கப்பட்ட ஜெர்மன் மொழிப் பெரும்பான்மை கொண்ட ஆஸ்திரியா ஏன் – ஜெர்மனியில் இருந்து கழன்று கொண்டது? Sudentenland ஏன் மறுபடி செக் குடியரசோடு இணைந்து கொண்டது?

சூடானீஸ் அரபிக்  எனப்படும் மொழி கொண்ட சூடான் ஏன் வடக்கு சூடான், தெற்கு சூடான் என்று பிரிந்தது?

கொரியன் என்ற ஒரே மொழி பேசும் நாடுகள் ஏன் வட கொரியா, தென் கொரியாவாக உள்ளன? சீன மொழி பேசும் பெரும்நாடு கம்யூனிஸ்ட் சீனாவுடன் இணையாமல் தைவான் ஏன் தனியாக நிற்கிறது? வங்கமொழியே பேசும் வங்கதேசத்தவன் ஏன் அதே வங்க மொழி பேசும் நமது மேற்கு வங்க மாநிலத்துடன் இணைந்து இந்தியனாக மாற மறுக்கிறான்? மொழி ஒன்றுதானே? இணைய வேண்டியதுதானே?  பாண்டிச்சேரி தமிழ் பேசும் மண்தான் – அதைத் தமிழ்நாட்டோடு இணைக்க ஏன் பாண்டிச்சேரிக்காரன் எதிர்க்கிறான்?

அதே பாண்டிச்சேரி மாநிலத்தின் பகுதியாக ஆந்திராவில் உள்ள தெலுங்கு பேசும் ஏனாமும், கேரளாவில் உள்ள மலையாளம் பேசும் மாஹேவும் இணைந்துள்ளதே எப்படி? அது மாநிலமோ தேசமோ எந்தப் பெருநிலமும் மொழி வழியில் உருவாகாது!

பாரதம் 565 சமஸ்தானங்களாக (சிற்றரசுகள்) இருந்தன. இன்று ஒரே நாடாக இருப்பதற்கு ஹிந்துத்துவமே காரணம். மொழியை வைத்து ஒரு தேசம் உருவாவது இல்லை. ஆன்மிகமும், கலாச்சாரமும் பண்பாடுமே ஒரு தேசத்தை நிர்ணயிக்கின்றன.

அதனால்தான் இதே மொழி வழி தேசியம் பேசுபவர்களுக்கு ஸ்பெயின்காரன் காடலோனியாவை பிரித்துக் கொடுக்க மறுக்கிறான்!      F