1971ல் வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே பாரதம் டிசம்பர் 6, 1971 அன்று வங்க தேசத்தை அங்கீகரித்தது. வங்க தேசத்துடன் இருதரப்பு தூதரக உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு பாரதம். இதனையொட்டி, பாரதமும் வங்கதேசமும் இணைந்து வரும் டிசம்பர் 6 அன்று மைத்ரி திவஸ் ( நட்பு தினம் ) நிகழ்ச்சியை கொண்டாடுகிறது. கடந்த மார்ச் 2021ல் பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச விஜயத்தின் போது, டிசம்பர் 6ம் தேதியை இரு நாடுகளும் இணைந்து நினைவுகூரவும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை பிரதிபளிக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மைத்ரி திவஸ் நிகழ்ச்சி, பாரதம், வங்கதேசத்தில் மட்டுமல்ல, பெல்ஜியம், கனடா, எகிப்து, இந்தோனேசியா, ரஷ்யா, கத்தார், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா என 18 நாடுகளில் கொண்டாடப்படும்.