பாரதத்தின் அண்டை நாடான பங்களாதேஷில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் விஷ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் காரணமாக வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஜூலை 21 அன்று கொல்கத்தாவில் நடந்த தியாகிகள் தின பேரணியில் முதல்வர் மம்தா கலந்து கொண்டு
பேசியதாவது; வங்கதேச விவகாரத்தைப் பற்றி நான் பேசக் கூடாது. எனினும், அந்த நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில் அங்கு வன்முறையால் பாதித்த ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தின் கதவுகளை தட்டினால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்று கூறினார்.
ஏனெனில், பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதிகளில் அகதிகளுக்கு இடமளிக்க ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துகிறது என மத்திய அரசுக்கு எதிராக பேசியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் மம்தா.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கொடுமைகளுக்கு ஆளான ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும் திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர். ஆனால், பங்களாதேஷ் அகதிகள் மீது மம்தாவிற்கு திடீர் பாசம் ஏற்பட என்ன காரணம் என்பதை ஆராய்ந்தால் இவரின் உண்மையான உள்நோக்கம் புரியும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. அகதிகளாக வருபவர்கள் சட்ட விரோதமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டால் அந்த வாக்கு தனக்கு கிடைக்கும் என்ற பேராசை தான்.
இப்படியே தொடர்ந்தால் மேற்கு வங்கம் முஸ்லிம்களின் மாநிலமாக மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ஹிந்துக்களுக்காக உருவானதுதான் மேற்கு வங்கம். ஆனால் இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் 35 சதவீத முஸ்லிம்களின் ஆதிக்கம் உள்ள மாவட்டங்கள் பல உள்ளன. இந்த ஆதிக்கத்தை மூலதனமனாக வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற எண்ணம் இவருக்கு.
தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 28.79 சதவீதமாக இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பங்களாதேஷ் அகதிகள் மூலமாக 30 சதவீதத்திற்கு உயர்ந்து விடும். இந்த நிலையானது, மேற்குவங்க மாநிலத்திற்கு மட்டுமில்லாமல் பாரத தேசத்திற்கு பேராபத்தாக மாறிவிடும்.
பங்களாதேஷ் எல்லையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்கள். அந்த வகையில், ஜமாத் −- உல் −- முஜாஹூதீன் பங்களாதேஷின் அகதிகள் என்ற போர்வையில் மேற்குவங்கத்தில் நுழைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
கடந்த ஜூலை 2019-ல் நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது : ஜமாத் −- உல்- − முஜாஹூதீன் பயங்கரவாத அமைப்பு மேற்கு வங்கத்தில் சில மதரஸாக்களை தீவிரமயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.