கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஜூன் 26 முதல் 29 வரை நடைபெற்று ‘கன்காமா’ கலை விழாவிற்கான சுவரொட்டிகளில் தேசியக் கொடியை அவமதித்து ‘ஹமாஸை’ ஆதரிக்கும் விதமான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான ‘இந்திய மாணவர்’ கூட்டமைப்பு இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘கன்காமா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அந்நிகழ்ச்சியில், தேசியக் கொடியையும், பாரத மாதாவையும் அவமதிக்கும் நோக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதற்கு, ஏ.பி.வி.பி அமைப்பினர் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். மேலும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்திருந்தனர். ஆனால், கம்யூனிஸ்ட் ஆட்சியின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்பினர் வளாகத்தில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். ஆனால், கிழிக்கப்பட்ட சுவரொட்டிக்கு மாற்றாக, கிழித்த தேசியக் கொடியின் கீழ் நிர்வாண பெண்மணி ஒருவரைக் காட்டும் விதமாக தயாரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஆத்திரமூட்டும் வகையில் தேசியக் கொடியில் கூடுதலாக, ‘ஹமாஸ்’ பயங்கரவாதத் தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக, வெட்டப்பட்ட தர்பூசணிகள் இடம் பெற்று இருந்தன. இந்தக் கலை விழாவிற்கு, ‘இன்டிபாடா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இந்த வாசகம் இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய ‘ஜிஹாத்தின்’ பெயர்தான் ‘இன்டிபாடா’ என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத எதிர்ப்பு, ஹிந்து மதத் தீவிரவாதம் போன்ற சுவரொட்டிகள் கேரளப் பல்கலைக்
கழகத்தின் வளாகத்தில் ஒட்டப்படுவது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. 2020ல் அரசு ‘பிரென்னன்’ கல்லூரி (கண்ணூர்) மற்றும் மலம்புழாவில் உள்ள அரசு ஐ.டி.ஐ கல்லூரியில் எஸ்.எஃப்.ஐ. சார்பில் சுவரொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த, சுவரொட்டியில் இந்தியா என் நாடு அல்ல. இந்த, அயோக்கியர்கள் என் சகோதர, சகோதரிகள் அல்ல. இதுபோன்ற, ஒரு நாட்டை நான் நேசிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில், இந்த நாட்டைப் பற்றி நான் பெருமைப்படவும் இல்லை. இந்தியாவில் இதுபோன்ற சூழலில் இந்த பயங்கரவாதிகளுடன் வாழ்வதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்ற வாசகங்கள் அந்த சுவரொட்டியில் இடம் பெற்று இருந்தன.
எர்ணாகுளம் (2022-ல்) மாவட்டத்தில் ஆலுவாவில் ‘யூனியன் கிறிஸ்டியன்’ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், நூற்றாண்டு விஸ்டா 2022 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது, திருக்குறள், ஸ்ரீமத் பாகவதம், சிவபுராணம் போன்ற ஹிந்து மத நூல்கள் மற்றும் ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பிரச்சாரம் செய்யப்பட்டன. அதேபோல, 2021-ல் திருச்சூரில் உள்ள ‘ஸ்ரீ கேரள வர்மா’ கல்லூரியில், ஜிகாத்தை ஆதரித்தும் பாரதத் தேசம் மற்றும் ஹிந்துத்துவாவிற்கு எதிரான ஓவியங்களை எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் வரைந்து இருந்தனர். கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ‘தீபா நிஷாந்த்’ இவர்களுக்கு பக்கப் பலமாக இருந்தார்.
அந்த வகையில், கேரள மாநிலம் மெல்ல மெல்ல இஸ்லாமிய அடிப்படை
வாதிகளின் கீழ் செல்கிறதோ? என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி மகாராஷ்ட்ர மாநிலம், மும்பையில் உள்ள ஐ.ஐ.டியில் கலை விழா ஒன்று நடைபெற்றது. இவ்விழாவில், ‘ராகோவன்’ என்ற பெயரில் மாணவர்கள் சிலர் சேர்ந்து நாடகம் ஒன்றை நடத்தினர்.
அது, ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நாடகம். அதில், ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்துக் கடவுள்களையும் இழிவுப்படுத்தும் விதமாக நாடகம் அமைந்து இருப்பதாக மாணவர்களில் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து, ஐ.ஐ.டி.யின் உயர் மட்ட குழு மே 8-ந் தேதி இதுபற்றி விவாதித்தது. அந்த வகையில், நாடகம் நடத்திய மாணவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, 4 மாணவர்களுக்கு தலா ரூ. 1.25 லட்சமும், மற்ற 4 மாணவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்படி, அபராதத் தொகையை ஜூலை 20-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில்,மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி, ஆலோசிக்கப்படும் என ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்திருந்தது. F